தியானம் (ஆடி 17, 2023)
விழிப்புள்ளவர்களாக இருங்கள்
எபேசியர் 5:16
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஒரு ஆலயத்திற்கு சென்று வந்த வாலிபனானவன், சபை கூடிவருதலைக் குறித்து தன் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வந் தான். ஒரு சில ஞாயிறு அராதனைக்கு சமுகமளிக்க தவறினால் என்ன? ஆண்டவர் நம்மை நரகத்திற்கு அனுப்பி விடுவாரா? கல்வி நிலையத் திலே பாடங்களை படிக்க தானே செல்கின்றேன். அது நன் மையான துதானே என்று கூறிக் கொண்டான். அதைக் கேட்ட அனுபவமிக்க மேய் ப்பரானவர், அவன் காரியங்களை உண ர்ந்து கொள்ளும் நாட்கள் வரும் என்று அவன்மேல் பொறுமையுள்ளவராக இரு ந்து வந்தார். ஆனால், அவனோ, தன் கருத்துக்களை மற்றய வாலிபர்களுக்கு கூறி, அவர்களில் சிலரின் மனதை குழ ப்பி, சில விவாதங்களையும் ஏற்படுத்தி வந்தான். அதனால், மேற் குறிப்பிட்ட வாலிபனானவன் தன் மேன்மையான அழைப்பைக் குறித்து, உணர்வடைய வேண்டும் என்று விரும்பிய மேய்ப்பரானவர், ஒரு கிழமை நாளிலே அவனை தொலை பேசி வழியாக தொடர்பு கொண்டார். மேய்ப் பரானவர்: தம்பி, நாளைக்கு நாங்கள் அடுத்த கிரமாத்திற்கு சென்று, அங்கு ஒரு உதவித்திட் டத்தை நடத்தப் போகின்றோம், நீயும் வந்தால் என்ன என்றார்? அதற்கு அவன்: ஐயா, எனது பாடசாலையில் நாளை க்கு முக்கியமான பாடங்களை கற்றுக் கொடுப்பார்கள் எனவே நான் நாளைக்கு வரமுடியாது என்றான். அதற்கு மேய்ப்பரானவர்: நாங்களும் மிக முக்கியமான அலுவலாக செல் கின்றோம். அங்குள்ள ஏழைகளின் வீடுகளை புனர்நிர்மாணம் செய்ய உதவி செய்யப் போகின்றோம், ஒரு நாள் நீ பாடசாலைக்கு செல்லாதிருந்தால் என்ன என்றார்? அதற்கு அவன்: இந்த பாடம் நிச்சயமாக இறுதிப்பரீட்சைக்கு வரும் எனவே அதில் ஒரு நிமிடத்தைக்கூட தவற விடக்;கூடாது என்றான். அதற்கு மேய் பரானவர்;: தம்பி, ஆறு மாதங்களுக்கு பின்வரவிருக்கும் பரீட்சைக்கு இத்தனை ஆயத்தங்கள் செய்கின்றாய். ஆனால், நித்திய ஜீவனை நோக்கிய பயணத்திற்குரியவைகளை கற்றுக் கொள்வதில், கிழமைக்கு இரண்டு மணிநேரங்கள் செலவிடுவதைக் குறித்து நீ மிகவும் அசட்டையு ள்ளவனாக இருக்கின்றாயே? என்று அவனிடம் கூறினார். பிரியமானவர் களே, அந்த வாலிபன் மட்டுமல்ல, இன்று வயது வந்த பலரும் இவ்வ ண்ணமாகவே, நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகளை கற்றுக் கொள் வதை அற்பமானதாக எண்ணுகின்றார்கள். அதனால், சோதனையின் நாட் களிலே சத்துருவின் கண்ணியிலே அகப்பட்டு, வாழ்வின் சமாதானத்தை இழந்து போய்விடுகின்றார்கள். நீங்களோ விழிப்புள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள்.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் மதியற்றவர்களை போல நடந்து கொள்ளாமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து வாழும் வாழ்க்கை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபே 6:11-13