புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 15, 2023)

ஞானமும் நற்கிரியைகளும்

1 கொரிந்தியர் 1:31

அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.


'எங்களுக்கு கொடுக்கப்பட்ட நாட்களிலே நற்கிரியைகளை செய்து ஞானமுள்ளவர்களாக வாழ வேண்டும். இவைகள் நம் வாழ்வில் இருந்தால் போதும்' என்று ஒரு மனிதனாவன் வாழ்க்கையின் அவசியமானவைகளைக் குறித்து தன்னுடைய தத்துவத்தை கூறிக் கொண்டான். இந்தக் கூற்றுக்களை மேலோட்டமாக பார்க்கும் போது அவற்றில் தவறு என்ன என்று கேட்க தோன்றுகின்றத ல்லவா? அந்த மனிதனானவனுடைய நீதியின் கிரியைகளிலே தேவனைக் குறித்த விசுவாசம் எங்கே? அவன் கூறும் ஞான த்திலே தேவ பயம் எங்கே? ஆத்தும இரட்சிப்பானது நம்முடைய நீதியின் கிரிகைகளினாலே உண்டாவதில்லை. ஆண்டவர் இயேசுவை இரட்சகர் என்று விசுவசிப்பதினால் உண்டாகின்றது. கர்த்தருக்கு பயந்து அவர் வழியிலே நடக்காதவன் ஞானமற்றவனாகவே இருக்கின்றான். எனவே தன் தத்துவத்தை கூறிய மனிதனுடைய நீதி இந்த உலகத்தின் நீதியாக இருக்கின்றது. அவன் கொண்டுள்ள ஞானமும் உலகத்திற்குரிய ஞான மாகவே இருக்கின்றது. பிரியமானவர்களே, மனிதர்களுடைய நீதியின் கிரி யைகள் தேவனுக்கு முன்பாக அழுக்கான கந்தைபோல இருக்கின்றது. (ஏசாயா 64:6) இவ்வுலக ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்திய மாகயிருக்கின்றது (1 கொரி 3:19). கிருபையினாலே விசு வாசத்தைக் கொண்டு இரட்சிப்பு உண்டாகின்றது. தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றவன், தேவ நீதியின் கிரியைகளை, தேவனுடைய நாம த்தின் மகிமைக்காக தன் வாழ்விலே நடப்பிக்கின்றான். தேவனுக்கு பயந்து அவர் வழியிலே நடக்கின்றவனுக்கு தேவனானர் மெய் ஞானத்தை அருளுகின்றார். தேவ ஞானம் அவனிடமிருப்பதால், அவன் தன் ஆத்துமாவை தீமைக்கு விலக்கி, பரிசுத்தத்தை தேவபயத்தோடு தன் வாழ்வில் காத்துக் கொள்கின்றான். இன்று சில தேவ பிள்ளைகளும்கூட விசுவாசமும், தேவபயமும் தங்கள் வாழ்க்கையிலே நிறைவேறி முடிந்த காரியங்கள் என்று எண்ணங் கொண்டவர்களாக, ஞானமாக வாழ்க்கை நடத்த வேண்டும், நற்கிரியைகளை செய்ய வேண்டும் என்று உலகத் திலே வாழும் தேவனை அறியாத மனிதர்களைப் போல மாறிப்போய்வி டுகின்றார்கள். அனுதினமும் கிறிஸ்துவோடு இசைந்திருந்து நிலைத்திரு க்கும் வாழ்விலே தேவ ஞானமும், தேவ நீதியும், மெய்யான பரிசுத்த மும், மீட்பின் அனுபவமும் உண்டாயிருக்கும். எனவே நாம் கிறிஸ்து விலே நிலைத்திருந்து மிகுந்த கனிகளை கொடுக்கும் வாழ்க்கை வாழ் வோமாக.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, நான் மறுபடியும் என் சொந்த கிரியைகளைக்குறித்து மேன்மைபாராட்டதபடிக்கு, கிறிஸ்துவிலே நிலைத்திருந்து, மிகுந்த கனி கொடுக்கும் வாழ்க்கை வாழ நீர் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:10