புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 14, 2023)

நம்முடைய பெலன் எங்கே?

சங்கீதம் 3:8

இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக


ஒரு தேசத்தை ஆண்டு வந்த அரசனானவன், தன் படைப் பலத்தையும், ஆயுதபலத்தையும், பொருளாதார மேம்பாட்டையும், வெளிக்காட்டும்படிக்கு ஒரு நாளை நியமித்திருந்தான். முன்குறித்த அந்த நாளிலே, சகல படைகளும், இருப்பு இரதங்களோடும், வலிமைமிக்க சர்வாயுதங்களோடும் பகுதிபகுதியாக அணிவகுத்து வந்தது. தேசத்தின் செழிப்பை வெளிக்காட்டும் பல கண்காட்சி கூடங்கள் அமைக் க்பட்டிருந்தது. ஜனங்கள் குடித்து, புசித்து, ஆடிப்பாடி தங் கள் தேசத்தின் மேன்மையை உணர்வுபூர்வமாக கொண்டாடி னார்கள். ஆம், இத்தகைய காட் சிகளை இன்றும் கூட நாம் செய்தி ஊடகங்கள் வழியாக காண்கின்றோம். இத்த கைய காட்சிகளின் மேன்மை பாராட்டு தலின் நோக்கம் என்ன? இவைகளினாலே தேசத்திற்கு இரட்சிப்பு உண்டாகுமோ? சற்று சிந்தித்துக் பாருங்கள். தேசத்தின் குடிகளில் சிலர் தங்கள் அறியாமையினாலே, உலக ஞானத்தையும், அதினால் அவர்களுக்கு உண்டான பெலத்தையும் குறித்து பெருமைபாராட்டுகின்றார்கள். பிரியமான தேவபிள்ளைகளே, இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. (2 பேது 3:7) தேவ பிள்ளைகளா கிய நாமோ, தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி தேசத்திற்காக கண்ணீரோடு ஜெபிக்க வேண்டும். தேசத்தை ஆளுகின்றவர்களாக வேண்டுதல் செய்ய வேண்டும். சில வேளைகளிலே ஆளுகின்றவர்கள் தேவனுக்கு விரோதமாக வைராக்கியம் கொள்ளலாம். அது அவர்களு டைய அறியாமை. சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். தேவனுக்கு பயந்து அவருக்கு பிரியமாக வாழ்ந்த, தாவீது ராஜா அறிக்கை செய் தது போல எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன். கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும் என்று அறிக்கை செய்வோமாக. இரட்சிப்பு கர்த்தருடையது. தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜன த்தின்மேல் இருப்பதாக.

ஜெபம்:

இரட்சிப்பின் தேவனே, நீர் நகரத்தைக் காத்துக் கொள்ளாவிட்டால், காவலாளர் விழித்திருக்கிறது விருதா என்பதை உணர்ந்து உம்மை நோக்கி பார்க்கும் உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 21:31