புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 13, 2023)

தேவ பக்தி

சங்கீதம் 4:3

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்;


உங்களைப் போல கல்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் தான் கடவுள் பக்தி தேவை. ஏனெனில் உங்களிடம் வேறொன்றும் இல்லை. ஆனால் என்னைப் போல சகல கலைகளும் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு கடவுள் பக்தி தேவையில்லை என்று ஒரு பெருமையுள்ள மனிதனானவன், தேவ பக்தியோடு வாழும் எளிமையான ஒரு குடியானவைப் பார்த்து கூறினான். அந்த பெருமையுள்ள மனிதனானவன், உலக கலைக ளிலே கற்றுத் தேர்ந்தவனும், பிர பல்யமானவனுமாக இருந்ததால், அந்த ஊரிலே வாழ்ந்த அநேகர், அவன் கூறிய கூற்றை அங்கீகரி த்தார்கள். எளிமையான வாழ்க்கை வாழும் தேவ பக்தியுள்ள விசுவாசியையோ அவர்கள் அற்பமாக எண்ணினார்கள். பிரியமானவர்களே, உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல், ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு அன்போடு அழைக்கின்றார். அவருடைய அழைப்பை ஏற்று அவர் மேல் விசுவாசம் வைக்கின்றவனுக்கு அவர் இரட்சிப்பை அருளு கின்றார். எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழை ப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவ ர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்ப டுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொ ண்டார்;. பலமுள்ள வைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமா க்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்ட வைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் (1 கொரி 1:26-29). இவ்வுலகத்தின் ஞானம் தேவ னுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவ ர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், ஞானிகளுடைய சிந்த னைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதி யிருக்கிறது (1 கொரி 3:19-20). பிரியமானவர்களே, நாம் கற்றவர்களா கவோ அல்லது கல்லாதவர்களாகவோ இருந்தாலும், உலகத்தாரைப் போல மனிதர்களுடைய அங்கீகாரத்தை நாடுபவர்கள் அல்லர். நாம் நம்மு டைய சிந்தனை சொல் செயல்கள் யாவும் தேவனுக்கு ஏற்புடையதாக இருப்பதையே நாம் எப்போதும் வாஞ்சிப்போமாக.

ஜெபம்:

என்னை உமக்கென தெரிந்து கொண்ட தேவனே, உமது அழை ப்பின் மேன்மையை உணராதபடிக்கு இந்த உலகத்திலே கிரியைசெய்யும் அந்தாரத்தின் அதிகாரம் என்னை மேற்கொள்ளாதபடி காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:24

Category Tags: