புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 12, 2023)

ஞானத்தின் ஆரம்பம்

நீதிமொழிகள் 1:7

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்


வாலிப பருவத்தை அடைந்த மாணவனானவன், வாழ்க்கையிலே தன்னுடைய கனவுகளை (Dreams) தான் பின்பற்ற வேண்டும், தான்; முன்வைத்த குறிக்கோளை பற்றிக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து கவர்ச்சிகரமான ஒரு உரையை ஆற்றினான். அதை கேட்டுக் கொண்டிருந்த அவனுடைய பாட்டனார், அவனை அழைத்து, தம்பி இன்று பாடசாலை பட்டமளிப்பிலே நீ உரையாற்றும் போது, உன் பேச்சு நடையையும், உரையின் சாரம்சத்தையும் அநேகர் மெச்சினார்கள். ஆனால், நீ உன் வாழ்க்கையில் இன்றியமையாத அம்சமொன்றை மறந்து போனாய். நாம் நம்முடைய விருப்பத்தையும், கனவுகளையும் நிறைவேற்றும்படி வேறுபிரிக்கப்படவில்லை. நம்மைக் குறித்ததான பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்றும்படியே அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை நீ ஒரு போதும் மறந்து விடாதே என்று தன் பேரனானவனுக்கு அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு நம் வாழ்க்கையிலே தடையாக வரும் எந்த உலக நன்மைகளும், உண்மையான நன்மைகள் அல்ல. இன்று பலர் தேவஞானத்தை, சிறுவர்கள் அசட்டை பண்ணு ம்படிக்கு, உலக ஞானத்தை மேன்மைப்படுத்தி, பெரும்பாலும் அதையே கற்றுக் கொடுக்கின்றார்கள். இப்படியாக உலக ஞானத்தை சிறுவர்களு க்கு கற்றுக் கொடுக்கின்றவர்கள் சிறுவர்கள் தேவ ஞானத்தை அற்பமாக எண்ணும்படிக்கு காரணர்களாக மாறிவிடுகின்றார்கள். சிறுவர்களுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக, சிறுவர்களுடைய வாழ்க்கையிலே பெரும் இடறல்களாக இவர்கள் தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள். இப்ப டியாக இந்த உலகிலே வாழும் சில கல்விமான்கள், தேவ ஞானத்தை அற்பமாக எண்ணுவதால், தேவஞானம் அவமாய் போய்விடுவதில்லை. மெய்ஞானம் தேவனிடத்திலிருந்து மட்டுமே வருகின்றது. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;. அவர் தம்மை விசுவாசிக்கின்றர்களுக்கு ஞானத்தை அருளும் ஆவியை கொடுக்கின்றார்;. இன்று உலகிலே கல்விமான்கள் என்று பெயர்பெற்ற சிலர், தேவனுடைய போதகத்தை அசட்டை பண்ணுகிறார்கள். அதனால் அவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய பார்வையிலே தங்களை மூடராக்கிக் கொள்கின்றார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது (நீதிமொழிகள் 1:7). எனவே மெய் ஞானத்தை கண்டடைய விரும்புகின்றவர்கள், தங்கள் வழியை கர்த்தரிடத்திலே ஒப்புவித்து, அவருடைய வார்;த்தையின் வழியிலே வாழக்கடவர்களாக.

ஜெபம்:

ஞானத்தின் ஆவியை அருளும் தேவனே, இந்த உலகத்தின் ஞானத்தினால் என் மனக் கண்கள் இருளடைந்து போய்விடாதபடிக்கு, பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து என்னை உம் வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 1:19-21