புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 11, 2023)

எது முதன்மையானது?

நீதிமொழிகள் 22:6

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.


நவீனமயமடைந்து கொண்டிருக்கும் இந்த உலகிலே, ஒரு மனித னானவன், உயிர்வாழ்வதற்கு அவசியமான அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கு ஒரு வேலையை அவன் பெற்றுக் கொள்வதற்குரிய கல் வித் தகமைகளானது உயர்த்தி வைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் பெற்றோர்கள் தங்களுக்கு கூடுமானவரை, தங்கள் பிள்ளைகளின்காக சின்ன வயதிலிருந்து கல்வி கற்பதற்கான வசதிகளை அமைத்துக் கொடுக்கின்றார்கள். கல்வி அறிவு பெருகுவதற்கு, தங்கள் பிள் ளைகளின் மழழைப் பருவத்திலிருந்தே தங்களால் கூடுமான வரை பல முயற்சிகளை செய்கின்றார்கள். கல்வியிலே தேர்ச்சியடைவதாலும், நல்ல உத்தியோகங்களிலே அமர்வதாலும் மனிதர்கள் சமாதானமான வாழ்வை பெற்றுக் கொள்ளக் கூடுமோ? இல்லை! எனவே, சின்ன வயதிலிருந்து பிள்ளைகளை தேவ பயத்திலே வளர்ப்பது, இவ்வுலகிலே சமா தானமான வாழ்வக்கையும், மறு உலகிலே நித்திய ஜீவனை அடை வதற்கும் இன்றியமையாதது. கல்விக்கும், தேவ பயத்திற்கும் சின்ன வயதிலிருந்து பயிற்சி அவசியமானது. இவற்றில் எதை தங்கள் பிள்ளைகளுடைய வாழ்விலே முதன்மைப்படுத்த போகின்றார்கள் என்பது பெற்றோருடைய தீர்மானம். சில பெற்றோர், இப்போது பிள்ளை படிக்கட்டும், வயது வந்தபின்பு ஆண்டவரை தேடட்டும் என்ற எண்ண முடையவர்களாக, தேவபயத்தில் பிள்ளைகள் வளர்வதற்கு வேண்டிய அனுதின வேத வாசிப்பு, ஊக்கமான ஜெபம், பிள்ளைகளுக்கு வேண்டிய வேதபடிப்புக்கள், சபைகூடிவருதல் போன்றவற்றை தள்ளிப் போடு கின்றார்கள். இதனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தேவனாகிய கர்த்தரை அறிவதற்கு இடறலாக மாறிவிடுகின்றார்கள். பிரியமானவர்களே, இந்த உலகிலே தரித்திரர்கள் என்று கருதப்படுகின்றவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவ ர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. பிள்ளைகளுக்கு நன்மை செய்ய விரும்பும் பெற்றோர், தேவ பயத்தில் வளர்வதற்கு முதலிடம் கொடுக்கின்றார்கள். தங்கள் ஆத்துமாவுக்கு நன்மையை விரும்பும் பெரியோர் தேவ பயத்தோடு தங்கள் வாழ்க்கையை காத்துக் கொள்கின்றார்கள்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, உம்மோடு வாழ்வதே என்னுடைய பாக்கியம் என்று உணர்ந்து, உம்முடைய வழிகளில் நடப்பதையே என் வாழ்வில் மேன்மைப்படுத்த எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 14:27