புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 10, 2023)

வாழ்வின் திட்டங்கள்

யோவான் 15:5

என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.


தேவன் ஞானத்தை கொடுத்திருக்கின்றார். எனவே நான் திட்டமிட்டு வாழ்வதில் என்ன தவறு? திட்மிடுவதால் விசுவாசம் அற்றுப் போய் விடுமோ என்று ஒரு மனிதனானவன் தன் போதகரிடம் கேட்டான். அத ற்கு போதகரானவர்: ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியானவன், கண க்கியலாளராக இருந்ததால், தன் குடும்ப கணக்கு வழக்குகளைக் குறி த்த அடுத்த இரண்டு வருடங்களுக்குரிய தெளிவான பொருளாதார திட்டத்தை மிக துல்லியமாக போட் டுக் கொண்டான். அவன் கணக்கி யலிலே கற்றுக் கொண்டவைகளை யும், அவனது அனுபவமுமே அந்த திட்டத்தின் அடித்தளமாக இருந்தது. அந்தத்திட்டத்திலே கணக்கியல் அம்ச ங்கள் யாவும் கருத்தில் கொள்ளப்ப ட்டது. அவனுடைய திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு முதன்மை யான காரியத்தை அவன் விட்டுவிட்டான். அது என்ன என்று உனக்கு புரிகின்றதா என்று போதகரானவர் அந்த மனிதனானவனிடம் கேட்டார்? அதற்கு அவன்: அவன் விசுவாசியானவனாக இருந்த போதும், கர்த்தருடைய வார்த்தைகளை விட்டுவிட்டான் என்று கூறினான். சரியாக சொன்னாய் மகனே! திட்டம் போட்டு வாழ்வதில் தவறில்லை. அந்த திட்டம் யாருடையது? அந்த திட்டத்திலே கர்த்தர் எங்கே இருக்கின்றார்? உலக ஞானமோ அல்லது தேவ ஞானமோ எது அங்கே மேன்மைப் படுத்தப்பட்டுள்ளது? நம்முடைய திட்டங்கள் யாவும் நம்மைக் குறித்த தான தேவனுடைய திட்டத்திற்குள் அடங்கி இருக்க வேண்டும். ஆனால் இன்று மனிதர்கள் உலக ஞானப்படி திட்டங்களைப் போட்டு விட்டு அந்த திட்டத்திற்குள் தேவனை அடக்குவதற்கு முயல்கின்றார்கள். சுய திட்டத்தில் வாழ்கின்றவர்களிடம் தேவ ஞானம் இல்லை. அவர்கள் விசுவாசமற்ற வாழ்க்கையை தங்களுக்கென தெரிந்து கொள்கின்றா ர்கள். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெரு மழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டி ன்மேல் மோதியும், அது விழவில்லை. ஏனென்றால், அது கன்மலை யின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது என்று கர்த்தராகிய இயேசு கூறியிருக்கின்றார்;. எனவே நம்முடைய திட்டம் தேவனால் அங்கீகரி கப்பட்டதாக இருக்க வேண்டும். அந்த திட்டம் நம் வாழ்விலே நிறை வேறும்படிக்கு நாம் தேவனுடைய வேளைக்காக் காத்திருந்து ஜெபிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

ஜெபம்:

காலங்களை அறிந்த தேவனே, என் வாழ்வின் திட்டங்கள் யாவும் என்னைக் குறித்ததான உம்முடைய திட்டத்திற்குள் அடங்கியிருக்கும்படிக்கு எனக்கு தேவ ஞானத்தைத் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:24-27