புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 09, 2023)

நலமானவைகளை பற்றிக் கொள்ளுங்கள்

சங்கீதம் 34:10

கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.


என் குடும்ப தேவைகளை யார் சந்திப்பார்? நான் உழைக்காமல் சோம்பேறியாக இருக்க முடியாது. கிடைத்திருக்கும் நல்ல வேலையைவிட்டு விடுவது மதியீனமான செயல் அல்லவா? குடும்பத்தின் தேவைகளை சந்திக்க சில ஆரதனைகளை தவறவிட்டால் குற்றமா என்று ஒரு விசுவாசியானவன் தன் மேய்ப்பரானவரிடம் கேட்டான். அதற்கு மேய்யபரானவர்: மகனே, நான் உன்னை குற்றப்படுத்தும்படிக்கு இங்கு வரவில்லை. நீ உன் குடும்பத் தேவை களை நன்றாக கவனிக்க வேண்டும். உலக தேவைகளை மட்டுமல்ல, அதிலும் மேன்மையான ஆவிக்குரிய தேவைகள் உண்டு. உன் பிள்ளைகள் சிறியவர்கள். தேவபய த்தில் அவர்கள் வளரும்படி அவர் களை பயிற்சிவிற்பதற்கு இது நல்ல நேரம். குடும்பமாக தேவனை ஆராதித்து, உன்னுடைய சாட்சியுள்ள விசுவாச வாழ்க்கையை அவர்களுக்கு நீ காண்பிப்பதற்கு நல்ல சந்தர்ப்பம். நீ சத்திய வேதத்தின் வார்த்தைகளை அறிந்தவன். எனவே, ஞானமான தீர்மானங்களை வாழ்க்கையிலே எடுத்துக் கொள். உன் இருதயத்தில் நீ எதை மேன்மைப் படுத்துகின்றாய் என்பதைக் குறித்து எச்சரிக்கையாக இரு என்று அவ னுக்கு ஆலோசனை கூறினார். பிரியமானவர்களே, நன்மையான வாழ்விற்கும், தீமையான வாழ்விற்கும் ஒரு சிறிய ஆரம்பம் உண்டு. எனவே நம்முடைய வாழ்க்கையின் தீர்மானங்களை குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமக்கு தேவ ஆலோசனை கூறுகின்றவர் களை எதிர்த்து விவாதம் செய்வதையும், நாம் தெரிந்து கொள்ளும் வழிகளை நியாயப்படுத்த முயற்சி செய்யவதற்கு முன்னும், நம்முடைய வழிகளை தேவவார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பார்க்ககற்றுக் கொள்ள வேண்டும். பின்வரும் இரண்டு தெரிவுகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டால் நீங்கள் எதைத் தெரிந்து கொள்வீர்கள்? 1. பொரு ளாதார செழிப்பும், ஆவிக்குரிய வறட்சியையும் 2. பொருளாதார வறட் சியும், ஆவிக்குரிய செழிப்பையும். முதலாவது தேவனுடையு ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகின்றவர்கள் ஆவிக்குரிய செழிப்பை அடைகின்றார்கள். பரமபிதாவானவர், அவர்களுடைய இந்த உலகத்தில் வாழ்க் கையின் தேவைகள் சந்திக்கின்றார். ஆனால், வாழ்வில் உண்டாகும் பொருளாதார செழிப்பு நிம்மதியைத் தருவதில்லை. சமாதானமான வாழ்வு தேவுனுடைய ஈவு. அதை ஒருவரும் விலை கொடுத்தது வாங்கிக் கொள்ள முடியாது. எனவே, உங்கள் வாழ்க்கையிலே நல்ல தீர்மானங்களை எடுத்தக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, என் வாழ்விலே நெருக்கம் ஏற்படும் போது, நான் நல்ல வழியை தெரிந்து கொள்ளும்படிக்கு எனக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 நாளாகமம் 26:5