புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 08, 2023)

சாட்சியான வாழ்க்கை

உபாகமம் 6:7

நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து,


விடுமுறை நாட்களிலே, பிள்ளைகள் முற்றத்திலே இருந்து, பெற் றோரைப் போல பாசாங்கு செய்து (Pretend) விளையாடிக் கொண்டி ந்தார்கள். தகப்பனானவர் அருகே சென்று பார்த்த போது, நிலத்திலே பல சதுரங்களாக கோடிடப்பட்டு, கடதாசி கட்டுகள் ஒவ்வொரு சதுர ங்களிலும் வௌ;வேறாக பிரித்து வைக்கப்பட்டிருந்தது. தகப்பனானவர் தன் மகனானவனை நோக்கி: அந்த கடதாசிகள் என்ன என்றும், நில த்தில் கோலமிடப்பட்ட சதுரங்கள் என்ன என்றும் கேட்டார். அதற்கு அவன்: அப்பா, இது கடதாசி கட்டு கள் அல்ல. இது பணக் கட்டுகள். அது வெறும் சதுரங்கள் அல்ல, அது வங்கிகள். பணக்கட்டுகள் வேவ்வேறாக பிரித்துக் கட்டப்பட்டு, வங்கிகளிலே சேமித்து வைக்கப்பட்டுள்ளது. முதலாவது வங்கி சேமிப்பு: தற்போதைய செலவி ற்கு. இரண்டாவது: உழைக்க முடியாத மழைநாட்களுக்கு (Rainy Days). மூன்றாவது: பிள்ளைகளுடைய கல்விச் செலவிற்கு, நான்காவது: முதலீடு செய்வதற்கு, ஐந்தாவது: உல்லாசப் பயணத்திற்கு என்று அவர்கள் கூறிக் கொண்டு இருந்த போது, தீடிரென்று காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. காற்றிலே அந்தப் பணக்கட்டுகள் யாவுமே பறந்து போயிற்று. மழையிலே நிலத்தில் போட்டப்பட்ட கோலங்களும் அழிந்து போய்விட்டது. பிள்ளைகளுக்கு அந்தக் காட்சி சுவாரசியமாக இருந்தது. ஆனால், தகப்பனானவருடைய உள்ள த்திலோ தன்னுடைய வாழ்க்கையின் சாரம்சம் இதுதான் என்ற உணர்வு அவன் உள்ளத்தில் ஏற்பட்டது. தேவனை அறிந்திருந்தும், அறியாதவன் போல வாழ்ந்துவிட்டேன். உழைப்பதும், சேகரிப்பதும், அதை கணக்கு பார்ப்பதுமே தன் பிள்ளைகளின் மனதிலே தன் னைக் குறித்து பதிந்திரு க்கும் சாட்சி என்பதை அவன் நினைக்கும்போது மனவேதனையடைந்தான். ஒருவேளை பிள்ளைகள் தங்கள் தந்தையானவரின் ஐசுவரியத்தைக் குறித்து மேன்மைபாராட்டலாம் ஆனாலும், அதைவிட அழியாத மேன்மையை பற்றிக் கொள்வது எப்படி என அந்த தந்தையானவர் தன் பிள்ளைகளுக்கு வாழ்ந்து காட்டவில்லை. பிரியமானவர்களே, தேவனா கிய கர்த்தருடைய வார்த்தைகள் உங்கள் இருயத்தில் இருக்கக்கடவது. வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் கருத்தாய் உங்கள் பிள்ளைகளுடன் பேசுங்கள். அழியாததும், வாடாததுமான நிலையான பரலோக பொக்கிஷத்தை நாடித் தேடுங்கள். உங் கள் பிள்ளைகளும் அதைப் பின்தொடர்வார்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, அழிகின்ற இந்த உலகத்தின் பொக்கிஷத்தை என் வாழ்வில் மேன்மைப் படுத்தாமல் நிலையான பரலோக பொக்கிஷத்தை வாஞ்சித்து தேட உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 5:3