புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 07, 2023)

வாஞ்சைகளும் தியாகங்களும்

1 கொரிந்தியர் 9:25

பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்.


இன்று நீங்கள், ஒற்றுமையாக இருந்து, வீட்டை சுத்தம் செய்வதற்கு உதவி செய்தால், நாளை உங்ளையெல்லாம் உல்லாசப் பூங்காவிற்கு அழைத்துக் கொண்டு செல்வேன் என்று ஒரு தகப்பனானவர் தன் பிள்ளைகளிடம் கூறினார். அதை கேட்டவுடனே, பிள்ளைகள் நாலு பேர்களும், ஒரும னமுடையவர்களானார்கள். தங்களுகிடையே இருந்த கருத்து முரண் பாடுகளை விட்டுவிட்டார்கள். அன்று முழுவதும் விளையாடாமலும், இன்ரநெற் ஊடக ங்களிலே நேரத்தை செலவிடாமலும், தங்கள் ஆசைகள் யாவையும் தியா கம் செய்து, வீட்டை சுத்தம் செய்வ தற்கு பல உதவிகளை செய்தார்கள். ஏனெனில், உல்லாசப் பூங்காவிற்கு செல்வதைக் குறித்த ஆசையின் மேன் மையினால் அவர்கள் தங்கள் வாழ் வில் எதையும் தியாகம் செய்ய ஆயத்தமுள்ளவர்களாக இருந்தார் கள். ஆம் பிரியமானவர்களே, உலகக் கிண்ண ஓட்டப் பந்தயப் போட் டியிலே தங்க பதக்கத்தை பெற்றுக் கொள்ள விரும்பும் ஒரு ஓட்டவீர னானவன் தன் வாழ்க்கையின் உல்லாசமான காரியங்களை தியாகம் செய்கின்றான். தெருவிலே, காணப்பட்ட் ஏழையானவன் உணவு உண் ண வேண்டுமென என்று நினைத்த சிறுபிள்ளையா னவன், தனக்கு மிட் டாய் வாங்க தன் தந்தையார் கொடுத்த பணத்தை ஏழையானவனுக்கு கொடுத்து விட்டான். மேன்மையான காரியங்களை பெற்றுக் கொள்ளும் படி, காரியங்களை நடப்பிக்கின்றவர்கள் அவற்றை தியாகங்கள் வழி யாக வெளிக்காட்டுகின்றார்கள். அதுபோல, தேவனை நேசிக்கின் றேன் என்று கூறும் ஒரு கிறிஸ்தவனின், வாழ்வின் மேன்மையானது, அவன் செய்யும் தியாகங்களினாலே வெளிப்படுத்தப்படும். இன்று, பலர், கல்வி, வேலை, விளையாட்டுகள் போன்றவற்றிக்காக ஆலயத்திற்கு செல்வ தை தியாகம் செய்து விடுகின்றார்கள். இவர்களுடைய வாழ்க் கையின் மேன்மை என்ன? இவைகளினாலே தாங்களும், தங்களைப் பின்பற்றும்; பிள்ளைகளும் ஆண்டவர் இயேசுவண்டை கிட்டி சேருவதை இவர்கள் தடை பண்ணுகின்றார்கள். அறியாமையினாலே, உணர்வற்ற வர்களாக, அழிந்து போகின்ற போஜனத்திற்காகவும், உலக பொருளு க்காகவும் தங்கள் வாழ்க்கையை முற்றாக தியாகம் செய்து விடுகின் றார்கள். அப் படியானல், அறிவையும், உணர்வையும் பெற்ற நாம், அழி யாத நித்திய ஜீவனுக்காக எப்படியாக தியாகமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். இந்தத் தியாகங்கள் யாவுமே நம்முடைய வாழ்க்கையின் நற்கிரியைகள் வழியாக உறுதிசெய்யப்பட வேண்டும்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, அழியாமையை நான் தரித்துக் கொள்ளும்படிக்கு அழிவுள்ளவைகளை விட்டுவிடும் உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 2:9