புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 05, 2023)

தடைகளை உடைத்துப் போடுங்கள்

மாற்கு 10:14

சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்


ஒரு சமயம், சிறு பிள்ளைகளின்மேல் அவர்கைகளை வைத்து ஜெபம் பண்ணும்படிக்கு அவர்களை ஆண்டவராகிய இயேசு வினிடத்தில் கொண்டுவந்தார்கள்;. கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவ ர்களைத் தடைபண்ணாதிருங்கள்; எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசி ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை அணைத்துக் கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அன்று சீஷர்கள் ஏதோ காரணத்தினால், சிறுபிள்ளைகள் இயேசுவினிடத்தில் வருவதற்கு தடையாக இருந்தார்கள். இன்று உங்களு கடைய பிள்ளைகள் ஆண்டவர் இயேசுவை அறிவதற்கு நீங்கள் தடையாக இருக்காதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்ளாக இருக்க வேண்டும். இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் (சங் 127:4). எனவே, அவர்களை அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து, ஆண்டவராகிய இயேசுவை அறியும் அறிவிலே வளர்க்க வேண்டியது, பெற்றோர்களினதும், பெரியவர்களினதும் கடமையாக இருக்கின்றது. தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியை தேடுவதே, முதன்மையானதும், அவசியமானதும், வாழ்வின் அடித்தளமானதும் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். கர்த்தர் இயேசுவைவிட்டு அவர்களை நீங்கள் தூரப்படுத்தும்படியான தடைகளை உண்டு பண்ணும்போது, கர்த்தர் அதைக் குறித்து விசனமடைகின்றவராக இருக்கின்றார். அதுமட்டுமல்ல, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயி ருக்கும் என்றும் கூறியிருக்கின்றார். எனவே, உங்கள் பிள்ளைகளைக் குறித்த விஷயத்திலும், உங்களை பார்க்கும் மற்றய சிறுபிள்ளைகளைக் குறித்த விஷயத்திலும் நீங்கள் அவர்களை கர்த்திரிடத்தில் நடத்துவதைக் குறித்து கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் தடைகளை ஏற்படுத்தாமல், தடைகளை உடைக்கின்றவர்களாக வாழ வேண்டும்.

ஜெபம்:

அரவணைக்கும் தேவனே, உம்மிடத்தில் சேருக்கின்றவர்களுக்கு, அறிந்தோ அறியாமலோ நான் தடையுள்ளவனாக மாறிவிடாதபடிக்கு எச்சரிக்கையுள்ள வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 127:1-6