புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 01, 2023)

வளம் நிறைந்த வாழ்வு

யோவான் 7:38

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.


ஒரு வீட்டின் சொந்தக்காரனானவன், தன் வீட்டின் பின் வளவிலிருந்த, சுத்தமான தண்ணீரைக் கொடுக்கும் துரவை மூடி, அதன்மேல் பன்றிகள் தங்குவதற்கு ஒரு பட்டியை அமைத்துக் கொண் டான். அவன் அந்த துரவை முடியாதால், அவனுடைய வீட்டில் சுரக்கும் சுத்தமான தண்ணீர் ஊற்றுக்களை அடைத்தானே தவிர, அயலவனு டைய வீட்டில் சுரக்கும் ஊற்றுக்களையோ அல்லது ஊரிலு ள்ள ஊற்றுக்களையோ அவனால் அடைக்க முடியாது. ஒருவேளை ஊரி லுள்ள மக்கள் யாவ ரும் ஒன்றுபட்டு தங்கள் வீடுகளிலுள்ள தண்ணீர் ஊற்றுக்களை அடைத்துவிட்டாலும் கூட நிலத்தின் ஆழத்திலிருக்கும் ஊற்றுக் களில் தண்ணீர் சுரக்கும் தன்மையை அவர்களால் அடைக்கவே முடியாது. பிரியமான சகோதர சகோதரிகளே, பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்ப ண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிட த்தில் விசுவா சமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப் போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். பிதாவாகிய தேவன் தாமே, மகி மைiயின் ராஜாவாகிய இயேசுவின் நாமத்திலே பரிசுத்த ஆவியானவரை நமக்கு அருளியிருக்கின்றார். ஜீவதண்ணீராகிய ஆவியானவர் தாமே, நம்மை சகல சத்தியத்திலும் வழிநடத்திச் செல்கின்றார். இன்று பலர் தங்கள் உள்ளத்திலிருந்து ஓடும் ஜீவதண்ணீரை அடை த்துப் போடுகின்றார்கள். அந்த வீட்டுக்காரன், தன் துரவை மூடி பன்றி களின் பட்டியை அமைத்தது போல, வாழ்க்கையை வளம்மிக்க தோட்டத்தைப் போலாக்கும் ஆவியானவரை விட்டுவிட்டு, தங்கள் வாழ்க்கையை வறண்ட நிலம் போல மாற்றிவிடுகின்றார்கள். பிரியமானவர்களே, நித்திய ஜீவ வழியிலே நம்மை நடக்க ஆலோசனை கூறும் சத்திய ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு இடங் கொடுங்கள். உங்கள் இருதயங்களை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ளுங்கள். வாழ் நாட்கள் முழுவதும் ஜீவ தண்ணீர் உங்கள் வாழ்வில் நதியாக பாய்ந்து செல்ல இடங் கொடுங்கள் அப்போது எவருமறியாத சந்தோஷம் உங்கள் உள்ளங்களை ஆண்டு கொள்ளும்.

ஜெபம்:

நித்திய வழியிலே நாம் நடக்கும்படி சத்திய ஆவியானவரை நமக்கு அருளிய பிதாவே, நாம் பெற்ற பாக்கியத்தை அற்பமாக எண் ணாதபடிக்கு, நம் வாழ்வை பரிசுத்தமாக காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எசேக்கியல் 47:12