புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 29, 2023)

மட்பாண்டங்கள்

2 கொரிந்தியர் 7:1

பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்


ஒரு கிராமமொன்றிலே, சில சிறு பிள்ளைகள் சேர்ந்து ஒரு மண்கு டத்திற்குள்ளே தண்ணீர் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ ர்கள் தண்ணீரை அதற்குள்ளே ஊற்றிய பின்பு, அரிசி போட்டு, சோறு சமைப்பது போல, மண்ணை எடுத்து அந்தக் குடத்துக்குள் போட்டா ர்கள். மண்ணோடு சேர்ந்து அழுக்குகளும் அதற்குள்ளே போயிற்று. சோற்றுக்கு உப்பு போடுவது போல, சிறியகற்களை எடுத்த அதற்குள்ளே போட்டு, நிலத்தில் கிடைந்த ஒரு தடி யை எடுத்து, அகப்பை போல குடத்தி ற்குள் போட்டு துலாவிக் கொண்டிருந் தார்கள். பிரியமானவர்களே, நாமும் மண் ணால் செய்யப்பட்ட குடத்தைப் போல இருக் கின்றோம். வாழநாள் குறைந்ததும், வரு த்தம் நிறைந்ததுமான மனித வாழ்க்கையின் வருடங்களிலே, நம்முடைய இந்த மட்குடத்திற் குள் அநேக காரியங்களால் நிரப்பிக் கொள்கின்றோம். சிறு பிள்ளைகள் அறியாமையுள்ளவர்கள். மதியீனம் அவர்கள் மனதை ஒட்டிக் கொள் வதைப் போல, தேவனை அறியாமல், இந்த உலகத்தின் போக்கின்படி வாழ்கின்றவர்கள். தங்கள் சிந்தையை இந்த உலகத்திலுண்டானவை களால் நிரப்பிக் கொள்கின்றார்கள். நெறிகெட்டதும், களியாட்டம் நிறை ந்ததுமான திரைப்படங்களிலுள்ள கதை வசனங்களினாலும், பாடல்க ளினாலும், பல காட்சிகளினாலும் தம்மை நிறைத்துக் கொள்கின்றார்கள். பானையிலே உள்ளதுதான் அகப்பையிலே வரும் என்ற பழமொழிக்க டங்க, ஆபத்து அவர்களை சூழ்ந்து கொள்ளும் போதும், இக்கட்டும் நெருக்கமும் சூழ்ந்து கொள்ளும் போதும், அவர்கள் எதினால் சிந் தையை நிறைத்தார்களோ, அவை அவர்களிடமிருந்து வெளிப்படும். ஆனால், அவர்கள் தேவனை அறியாததால் அப்படி செய்கின்றார்கள். ஒருவேளை அவர்கள் தேவனை அறியும் போது, மேன்மையாவைகளை நாடித் தேடுவார்கள். ஆனால், தேவனை அறிந்து, தேவ பிள்ளைகள் என்ற நாமத்தை தரித்தவர்கள், இன்று தங்கள் சிந்தைகளை, மட்குடத் தை மண்ணாலும், அழுக்குகளால் நிறைத்த அந்த சிறு பிள்ளைகளைப் போல, இந்த உலகத்தின் திரைப் படங்களாலும், களியாட்டங்களி னாலும், நெறிகெட்ட பாடல்களினாலும், கதை வசனங்களினாலும் நிறை த்துக் கொள்கின்றார்கள். இது அறியாமையல்ல, இது துணிகரம் கொள் ளுலுதல். இதனால் இக்கட்டு நாட்களில் தேவனை தேடியும் கண்ட டையாமற் போகின்றார்கள். நாமோ அவ்வண்ணமாக இராமல், தேவ பயத்தோடு நம்முடைய பரிசுத்த வாழ்க்கையை காத்துக் கொள் வோமாக.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழ என்னை பிரித்தெடுத்த தேவனேஇ இந்த பூமியில் வாழும் நாட்களிலே நான் உம்மை அறிகின்ற அறிவினாலே நிறைந்து பெருக எனக்கு உம்முடைய ஞானத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 12:34