புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 28, 2023)

அவனைவிட நான் நல்லவன்?

மத்தேயு 5:16

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது


வாக்குவாதத்தை ஆரம்பித்தவன் நான் அல்ல. அதற்கு என் நண்பர்கள் சாட்சி. சில ஆசிரியர்களும் அதை அறிந்திருக்கின்றார்கள். காரியம் அப்படியிருக்க, நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது நியாயமல்ல. குழப்பத்தை ஏற்படுத்திய மற்றய மாணவர்களே; மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு பாடசாலை மாணவனானவன் தன் தகப்பனானவரிடம் கூறிக் கொண் டான். அதற்கு தகப்பனானவர்: மகனே, நீ குற்றம் ஏதும் செய்தாயா என்று கேட்டார். அதற்கு மகனானவன்: நான் செய்ததைவிட மற்றய மாணவர்கள் செய்ததே பெரிய குற்றம் என்று பதி லளித்தான். அதற்கு தகப்பனானவர்: மகனே, மற்றவர்கள் அல்ல நீயே என்னுடைய வாரிசு. நீ தான் என்னு டைய பெயரை தரித்திருக்கின்றாய். மற்றவர்கள்; பெரிதான குற்றங் களை செய்தாலும், நீ உன் நடக்கை யையும், உன் வார்த்தைப் பிரயோகத்தையும் காத்துக் கொண்டிருக்க வேண்டும். நாளைக்கு நீ என்னோடு அதிபருடைய காரியாலயத்திற்கு வந்து, உன்னுடைய நெறியற்ற நடத்தைக்காக மன்னிப்பை பெற்றுக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவ தினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரி தென்று பாருங்கள். சில வேளைகளிலே, தேவ பிள்ளைகள், தங்கள் குற்றங்களை ஒப்பிட்டு பேசிக் கொள்வார்கள். எடுத்துக் காட்டாக: சகோ தரனே, நீ ஏன் கெட்ட வார்த்தைகளால் உன் அயலவனைக் கடிந்து கொண்டாய் என்று ஒரு மூப்பரானவர் ஒரு விசுவாசியிடம் கேட்டார். அதற்கு அந்த விசுவாசியானவன்: அந்த அயலவன் பேசாத வார்த்தை யையா நான் பேசிவிட்டேன். அவனுடைய சிந்தையானது கெட்ட வார்த்தைக ளினாலே நிறைந்திருக்கின்றது என்று கூறினான். அதற்கு அந்த மூப்பரா னவர்: அவன் கர்த்தரை அறியாதவன். தன் சிந்தைக்கு எட்டியதை செய் தான். ஆனால் நீயோ கர்த்தருடைய அன்பை ருசிபார்த்தவன். அவரு டைய பிள்ளையாக இருக்கின்றாய். இருளில் இருக்கும் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்க வேண்டியவன். சாரமற்ற பூமிக்கு உப்பாக திகழ வேண்டியவன்;. உன் நடக்கையை பார்த்து, உன் அயலவன் பரம பிதாவை மகிமைப்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆம், நாமும் உன்னதமான தேவ அழைப்புக்கு பாத்திரர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு வேறுபிரித்தவரே, என்னுடைய நற்கிரியைகள் வழியாக உம்முடைய நாமம் மகிமைப்படுத்படிக்கு நான் உணர்வுள்ள வாழ்க்கை வாழ உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 3:1