புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 27, 2023)

ஆராய்ந்து பாருங்கள்

மத்தேயு 7:3

நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?


தேவனிடம் இருந்து பத்து கட்டளைகளை பெற்றவர்கள், அவைகளை தங்கள் வாழ்வில் மனதாரக் கைக்கொள்வதைவிட, மற்றவர்களுடைய வாழ்க்கையிலே அவைகளை திணிப்பதிலும், அவற்றிலிருந்து தவறுகி ன்றவர்களை தண்டிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள். அப் படிப்படிட்ட மனநிலையுள்ள சிறப்பு குடிமக்களை கண்ட கர்த்தர், அவர்களை நோக்கி: சுமப்பதற்கரிய பார மான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவை களைத் தொடமாட்டார்கள் என்று கூறியிருக்கின்றார். இன்று ஊடகங் கள் வழியாக உலகச் செய்திகள் சீக்கிரமாய் பரந்து செல்வதைப் போல, தேவ அழைப்பை பெற்றவர்களுடைய வாழ்க்கையைக் குறித்த காரியங்களும் துரிதமாக செல்கின்றது. அவைகளிலே நன்மையும், தேவனுக்கு பிரியமுமான செய்திகளை கேட்பதைப் பார்க்கிலும், இன்று சிலர், மற்றய தேவபிள்ளைகளுடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகளை குறித்து தகவல்களை அதிகதிகமாக படிக்கின்றார் கள், கேட்கின்றார்கள், பார்க்கின்றார்கள். தங்களுடைய சபையை மறந்து, மற்ற சபைகளின் குறைகளையே பற்றிப் அறிய ஆவலாக இருக்கின் றார்கள். தங்கள் குடும்பத்தின் குறைகளை பராமுகமாகவிட்டுவிட்டு, மற் றய குடும்பங்களின் குறைகளை காண்கின்றார்கள். தேவ வசனத்தை கேட்டு, அதை தாங்கள் கைக்கொள்ளுவதில் நேரத்தை செலவு செய்வதைவிட, தேவ வசனத்தை கேட்டு அதை கைகொள்ளாமல் இருக்கின்ற மற்றய விசுவாசிகளை பற்றி அதிக கரிசணையுள்ளவர்களாக மாறிவிடு கின்றார்கள். பிரியமானவர்களே, இது தேவன் நமக்கு ஏற்படுத்திய அழைப்பு அல்லவே. முதலாவதாக, நான் திருவசனத்தை கேட்கின்றவனாக மாத்திரமல்ல, அதைக் கைகொள்கின்றவனாகவும் வாழ வேண்டும். என் கண்ணிலுள்ள விட்டத்தை மறந்து, அயலவனுடைய கண்களிலுள்ள துரும்பை நோக்கிப் பார்க்கக் கூடாது. நிற்கின்ற நான் விழுந்து போகாமல், என் நடையை காத்துக்கொள்ள வேண்டும். பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் மற்றவர்களை குறித்து அறிகின்ற அறிவிலல்ல தேவனைக் குறித்து அறிகின்ற அறிவிலேயே வளரவேண்டும். மற்றவர்கள் வளர வேண்டிய காரியங்களை குறித்து நொந்து கொள்வதற்கு முன்பதாக, நாம் வளர வேண்டிய காரியங்களை குறித்து நாம் ஆராய்ந்து பார் த்து கர்த்தரிடம் சேர்ந்து கொள்வோமாக.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனேஇ நான் பெற்ற உன்னதமாக அழைப்பை மறந்துஇ மற்றவர்களுடைய குறைகளை கண்டுபிடிப்பவனாக மாறிவிடாதபடிக்கு என்னை காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:1-4