தியானம் (ஆனி 26, 2023)
சீர்பொருந்தப்பண்ணுதல்
2 தீமோத்தேயு 4:2
எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.
ஒரு தகப்பனானவர், தன்னுடைய பிள்ளையானவனுடைய வாழ்;க்கை யிலே அவன் சில தவறான வார்த்தைகளை பேசுவதைக் கேட்டு, ஒரு சில தடவை கள் அவனுக்கு அவர் தயவாக ஆலோசனை கூறினார். சில நாட்களளுக்கு பின்பு, அவன் தன் நண்பர்களோடு விளையாடும் போது, மறுபடியும் தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதைக் கேட்டார். இதைக் கண்டு விசனமடைந்த தக ப்பனானவர், இது தன் பிள்ளை யானவனின் பழக்கமாக மாறுவ தற்கு முன், அவனை நெறிப்ப டுத்த வேண்டும் என்று அவனை கண்டித்து, தண்டித்தார். பிள்ளை யானவனுக்கு அது ஒரு கசப்பான அனுபவமாக இருந்துது. சில நாட் களுகளாக அவன் தன் தகப்பனானவரோடு பேசுவதற்கு தயக்கம் காட் டினான். தகப்பனானவர் தன் பிள்ளையை கண்டித்து, சில தண்டனை களை கொடுத்தது அவருக்கு இனிப்பான அனுபவமாக இருக்கவில்லை. ஆனால், தன் பிள்ளையானவன், சரியான வழியிலே நடக்க வேண்டும் என்பதற்காக அவனை நெறிப்படுத்தினார். அவர் உள்ளத்திலே தன் பிள்ளையானவனைக் குறித்து எந்தக் கசப்பும் இல்லை. அவன் வருத்தமாக இருந்த நாட்களிலே அவனை தன் தோளின்மீது தூக்கி சுமந்தார். இனி யும் அப்படியே செய்வார். நம்முடைய வாழ்க்கையிலும், கண்டிப்பதும், தண்டிப்பதும், நெறிப்படுத்துவதும் ஒரு கசப்பான அனுபவமாக இருக்கி ன்றது. ஆவிக்குரியவர்களாகிய நாம் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் திருவசனத்தினால் சீர்பொருந்தப்பண்ண வேண்டும். எனினும் சில வேளைகளிலே, நாம் உடன் சகோதரர்களையும் கண்டித்து உணர்த்த வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றோம். கண்டிக்க ப்பட்டவர் அந்தப் பிள்ளையானவனைப் போல, பேசுவதற்கு தயக்கம் காட்டினாலும், நாம் கண்டித்து உணர்த்திய பின்பு, அவர்களைக் குறித்த கசப்பை நம் மனதிலே வைத்திக்கக்கூடாது. நாம் மாறாக, அவர்களு க்காக பரிந்துபேசி ஜெபிக்க வேண்டும். ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கம் நம்மில் பெருக வேண்டும். அந்த தகப்பனானவரைப் போல, தூக்கிச் சும க்கின்றது போன்ற இருதயம் நம்மில் உருவாக வேண்டும். பகைவரை நாம் நேசிக்க வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. அப் படியானால், நம் உடன் பங்காளிகளை நாம் எவ்வளவு அதிகமாக நேசி க்க வேண்டும். எனவே, அவர்களை நினைக்கும்போதெல்லாம் அவர்க ளுக்காக வேண்டுதல் செய்ய பழகிக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, நித்திய ஜீவனுக்கென்று நீர் அழைத்தவர்கள், அதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையையோடு அவர்களுக்காக வேண்டுதல் செய்யும் மனதை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 6:2