புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 25, 2023)

இன்னுமொரு சந்தர்ப்பம் உண்டா?

எரேமியா 23:29

என் வார்த்தை அக்கினியைப் போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்


அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கிய மேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசி யுடனே விசுவாசிக்குப் பங்கேது? என்ற வார்த்தைகளை சிறுவயதுமுதல் அறிந்திருந்தும் நான் என் வாழ்க்கைத் துணையை என் இஷ;டப்படி தெரிந்து கொண்டேன். இன்று வீட்டிலே குடும்பமாக கர்த்தரை நோக்கி ஜெபிக்க முடியாது. வீட் டில் நடக்கும் விருந்துகளள் சினிமா கொட்டகைபோல இருக்கின்றது. பிள்ளைகள் அங்குமில்லை இங் குமில்லை என்று தேவனைக் குறி த்த பயமின்றி வளர்ந்து வருகின் றார்கள் என்று தன் மனதின் ஆத ங்கத்தை தன் பாட்டனாரிடம் பேர னானவன் கூறிக் கொண்டிருந்தான். அதற்கு பாட்டனானவர்: தம்பி, தேவனுடைய பிரமாணங்களை மீறி, நீ இப்படியாக திருமண ஒப்பந் தத்திற்குள் உன்னை பிணைத்துவிடடாய். எனவே, ஒரு புருஷனா னவன் செய்யவேண்டிய கடமைகளை நீ உன் மனைவிக்கு செய்ய வேண்டும். இந்த நிலையிலே எல்லா குற்றத்தையும் அவளுடைய தலை யிலே போட்டுவிடாமல், உன் தவறை நீ நன்றாக உணர்ந்து, மனதார உன்னை தேவனிடம் அர்ப்பணித்து, உன் குடும்பத்திலே உன் அன்புள்ள நன்நடக்கையை காண்பித்துக் கொள். கர்த்தருக்கு முன்பாக நீ உண்மை யுள்ளவனாக நடந்து கொண்டு நீடிய பொறுமையுள்ளவனாக இரு. மன துருக்கமுள்ள நம்முடைய தேவனாகிய கர்த்தர் உன் கீழ்படிவுள்ள இரு தயத்தைக் கண்டு உன் குடும்பத்தில் இரட்சிப்பை உண்டு பண்ணுவார் என்று அறிவுரை கூறினார். ஆம், பிரியமானவர்களே, முதலாவதாக, நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடந்தால், தவறிப் போய் மனந்திரும்ப வேண்டிய அவசியமில்லை (சங்கீதம் 128). ஆனால், கர்த்தரை அறிந்தபின்பும் இச்சைகளினாலே இழும்புண்டு, கண்போன போக்கிலே போய், தேவ சமாதானத்தை இழந்து போனால், அப்படியே உங்கள் வாழ்க்கையை தொடர்ந்தும் அழித்துக் கொள்ளாதபடிக்கு, காலதாமதமின்றி, உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, உன் உங்களது முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவ ருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால், அவர் வார்த்தையை அனுப்பி கல்லான இருதயங்களை, தமக்கேற்ற இருதயங்களாக மாற்றுவார்.

ஜெபம்:

மனதுருக்கமுள்ள என் தேவனாகிய கர்த்தாவே, என் துணிகரமான குற்றங்களை எனக்கு நீர் மன்னித்து உம்முடைய கிருபையின்படி மனமிரங்கி இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏரேமியா 31:3