புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 23, 2023)

இருதயத்தில் மறைந்திருப்பவைகள்

யோவான் 4:24

தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும் என்றார்.


நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்று கர்த்தராகிய இயேசு சமாரிய ஸ்திரியானவளுக்கு கூறினார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண் டும் என்றாள். இயேசு அவளை நோ க்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார். அத ற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லை யெ ன்று நீ சொன்னது சரிதான். எப்படியெ னில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார் கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ள படி சொன்னாய் என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். அன்பு ஆண்டவர் இயேசு, ஏன் அவளுடைய வாழ்க்கையின் அலங்கோலத்தை அவளுக்கு வெளிப்படுத்த வேண்டும்? அவளை அப்படியே மன்னித்துவிட்டால் என்ன? எனக்கு புருஷன் இல்லை என்று தன்னுடைய இருளான வாழ்க் கையை மறைத்து வைத்திருந்தாள். அவளிடம் மனந்திரும்புதல் இல்லை. உண் மையை பேசும் தன்மை இல்லை. ஆனால், அவள் தொடர்ந்தும், தேவனை தொழுது கொள்வதைக் குறித்து கர்த்தரிடம் கூறினாள். அவ ளைப் போல இன்றும் பல மனிதர்கள், வேத வார்த்தைகளை அறிந்திரு க்கின்றார்கள். தங்கள் பாவங்களை மனிதர்களுக்கு மறைத்து வைத்துக் கொண்டு, சத்தியமான வார்த்தைகளின்படி வாழாமல், சத்திய வார்த்தை களை பேசி, தேவனை ஆராதிக்கின்றார்கள். கர்த்தர் அந்த ஸ்திரியை நோக்கி: தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிற வர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவே ண்டும.; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களா யி ருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார் என்று கூறினார். பிரியமான வர்களே, இருதயங்களை ஆராய்ந்தறிகின்றவர் நம்முடைய சிந்தையை அறிந்திருக்கின்றார். எனவே, மறைவானதும் துணிகரமானதுமான பாவங்களில் வாழாமல் அவைகளை அறிக்கையிட்டு, விட்டுவிட்டு, உண்மையோடு தேவனைத் தொழுது கொள்வோமாக.

ஜெபம்:

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:12-14