தியானம் (ஆனி 22, 2023)
ஏன் என்னை கடிந்து கொள்கின்றீர்கள்?
வெளி 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
என்ன போதகர் ஐயா அவர்களே, இயேசுவைப் போல மாறவேண்டும் என்று ஓயாமல் பிரசங்கிக்கின்றீர்கள் ஆனால் நீங்களோ இயேசுவைப் போல என் குடும்பத்தின்மேல் அன்பை காடடாமல், என் குற்றத்தை கடிந்து கொள்கின்றீர்களே என்று ஒரு விசுவாசியானவன் தன் போதக ரிடம் கூறினான். அவன் திறந்த மனதோடு, தன்னிடம் பேசியதை கேட்ட போதகரானவர், புன்முறுவலோடு அவனை அழைத்து. தம்பி, இப்படி இங்கே உட்காரு என்று கூறி, அவ னை நோக்கி: உன்னுடைய அப்பா வை நீ கடந்த மாதம் வைத்தியரிடம் மருத்துவ சோதனைக்காக கொண்டு சென்றாய் அல்லவா? வைத்தியர் உன்னிடம் என்ன சொன்னார் என்று கேட்டார். அதற்கு விசுவாசியானவன்: உடனடியாக சில சிகிச்சசைகளை செய்யாதவிடத்து, அப்பாவிற்கு சீக்கரமாய் மரடைப்பு ஏற்படும் என்று கூறினார் என்றான். அது மட்டுமா கூறினார் என்று போதகர் கேட்டதற்கு: இல்லை, அப்பா, வைத்தியர் கூறியபடி உண்பதை கட்டுப்படுத்தாமலும், உடற்பயிற்சி செய்யாமலும், மாத்திரைகளை நேரத்திற்கு எடுக்காகததற் காவும் அவரை மிகவும் கடிந்து கொண்டார் என்று கூறினான். அதற்கு போதகரானவர்: மிகவும் கடிந்து கொண்டாரா? அப்படியானால், அந்த வைத்தியருக்கு உன் அப்பாவைக் குறித்து கரிசணை இல்லையா என்று கேட்டார். அப்பபோது அந்த விசுவாசியானவன் சிந்திக்க ஆரம்பித்தான். போதகரானவர் அவனை நோக்கி: தம்பி, தேவனுடைய வார்த்தையை பிரசங்கிக்கும்படி நான் அழைக்கப்பட்டேன். உன்னை கடிந்து கொள் வதால் எனக்கு ஆதாயம் என்ன? நீ நீதியின் பாதையில் நடந்தால் யாரும் உன்னை கண்டிக்கப்போதில்லை. சரீர நோய்கள் மனிதனுடைய ஆயுள் நாட்களை இந்த உலகத்திலே குறைக்கும். ஆனால், ஆவிக்கு ரிய நோயானது மனிதனை நித்திய மரணத்திற்குள் தள்ளி விடும். சரீர ஆரோக்கியத்திற்காக மனிதர்கள் எவ்வளவாய் பிரயாசம்படுகின்றார்கள். அப்படியானால் உன்னுடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்காக நீ எவ் வளவாய் பிரயாசப்பட வேண்டும். எனவே, ஆவிக்குரிய நோய்க ளின் அறிகுறிகளை நான் விசுவாசிகளின் வாழ்க்கையிலே காணும்போது, அவர்களை தேவனுடைய வார்த்தைகளால் அவர்களுக்கு கண்டித்து உண ர்த்திக் கூறுவது என்னுடைய பொறுப்பும் கடமையும் என்று கூறினார்.
ஜெபம்:
சகல சத்தியத்தின் வழியிலே நடத்தும் தேவனே, உம்முடைய வார்த்தை பேசப்படும் போது, நான் என்னுடைய மீறுதல்களை மறைக் காமல், அறிக்கையிட்டு விடுவிடும்படி பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 சாமு 7:14