தியானம் (ஆனி 21, 2023)
எனக்கு இனி மன்னிப்பு இல்லையா?
1 யோவான் 1:9
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்
என்னுடைய மகளானவள், தன் இளவயதின் அறியாமையினாலே அந் நிய நுகத்திலே பிணைக்கப்பட்டுவிட்டாள். நாங்களும் ஏதோ அந்த நாட் களிலே அவளுடைய ஆசைக்கு இணங்கி திருமணத்தை செய்து வைத் துவிட்டோம். தவ றுகள் நடந்து முடிந்து விட்டது. விபச்சாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட ஸ்திரியையே, ஆண்டவராகிய இயேசு மன் னித்துவிட்டார். எங்களுக்கும் எங்களு டடைய மகளுக்கும் மன்னிப்பு இல் லையா என்று ஒரு பெற்றோர், மேய்ப னானவரிடம் கேட்டார்கள். அதற்கு மேய் ப்பரானவர்: பிரியமான சகோதரனே, சகோதரியே, உங்களுடைய மகளான வள், இளவயதின் அறியாமையினா லே தன் இஷ;டப்படி செய்துவிட்டாள். ஆனால், தேவனுடைய வார்த்தையை நன்கு அறிந்த நீங்கள், அதை நியாய ப்படுத்தும்படி வெகுவாய் முயற்சி செய்து, சபையில் பெலவீனர்கள் மத் தியிலே அநேக இடற ல்களுக்கு கார ணமாகயிருந்தீர்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் இரக்கங்க ளுக்கு முடிவில்லை. அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இர த்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும. என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, விபசாரத்திலே பிடிபட்ட ஸ்திரியை மன்னித்தார். அவளை மன்னித்து அனுப்பும் போது, 'நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே' என்றார். பாவ மன்னிப்புக்கு உண்மையான மனந்திரும்புதல் அடிப்படை யானது. திருமணமாகுவதற்கு முன்னர் உங்கள் மனதை கடினப்படுத்தி, தேவனுடைய வார்த்தையை மீறி பல குழப்பங்களை ஏற்படுத்தினீர்கள். ஒருவரும் கெட் டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் தேவன் நீடியபொறுமையுள்ளவராயிருக்கிறார் (2 பேதுரு 3:9). ஆனால், இப்போது நீங்கள் அன்று செய்த குற்றங்களுக்காக மனம்வ ருந்துகின்றீர்கள். அது நல்லது. ஆனால், இன்றும், இனியும் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை தேவனுடைய வார்த்தையின்படி செய்வதற்கு மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள் என்று ஆலோசனை கூறி னார். பிரிமானவர்களே, கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்த மும், மிகுந்த கிருபையுமுள்ளவர். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங் குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். எனவே தேவனுக்கு பயந்து அவருடைய வழிகளிலே நடக்கும்படி விழிப்புள்ளவர்களாக இருங்கள்.
ஜெபம்:
இரக்கமுள்ள தேவனே, இன்று நான் உம்முடைய சத்தத்தை கேட்டு, என் இருதயத்தை கடினப்படுத்தாமல், உம்முடைய சித்தத்தை நான் நிறைவேற்ற உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 103:8-13