புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 19, 2023)

பாத்திரவான்களாய் நடந்து கொள்ளுங்கள்

எபேசியர் 4:1

நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவா ன்களாய் நடந்து,


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாச குடும்பத்தை சேர்ந்த மகனான வனிற்கு, அவனுடைய பெற்றோர் திருமணத்திற்காக பொருத்தமான பெண்ணை தேடினார்கள். சில மாதங்களுக்கு பின், ஒரு நல்ல குடும்ப த்தை சேர்ந்த, கல்வி கற்ற, அழகான ஒரு பெண்ணின் விபரங்களை பெற் றுக் கொண்டார்கள். திருமண பேச்சுக்கள் ஆரம்பித்து, எல்லாப் பேச்சுக்களும் முடிந்த பின்பு, திருமணத்தை கிறிஸ்தவ முறையிலே வைப்பதா அல்லது பெண்ணின் குடுத்பத்தாரின் விருப்பப்படி வேறு முறையிலே வைப்பதா என்ற பேச்சு ஆரம்பித்தது. அந்த சம்பந்தத்தை பற்றி விசுவாச குடும்ப த்தார் சபையின் மேய்ப்பரானவருக்கு கூறினார்கள். அதை கேட்ட மேய்ப்பனானவர் ஆச்சரியத்தோடு பெற்றோரை நோக்கி: இந்த விவகாரங்களைப் பற்றி நீங்கள் முன்னதாகவே அறிந்திருக்கவில்லையா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: அந்தப் பெண் எல்லா விதத்திலும் எங்கள் மகனானவனுக்கு மிகவும் பொருத்தமானவள், ஆனால், அவனோ விசு வாசக் குடும்பத்தை சேர்ந்தவளல்ல, அது ஒன்றுதான் குறை. ஆனால், எங்களுடைய மகனானவன் ஆலயத்திற்கு செல்வதைக் குறித்து அவர்ககளுக் எந்த முரண்பாடுகளும் இல்லை என்று கூறினார்கள். அதைக் கேட்ட மேய்ப்பரானவர், தேவன் கொடுத்த விலைமதிக்க முடியாத இரட்சிப்பை விளையாட்டாக எண்ணுகின்றார்களே என்று மனவேதனையடைந்தார். ஆம், பிரியமானவர்களே, இன்று சிலர் தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியை தேடுவதையும் தங்கள் பட்டியலில் கடைசி அம்சமாக வைத்திருக்கின்றார்கள். அந்த கடைசி அம்சத்திலும், தாங்கள் நினைத்தபடி மேய்ப்பரானவர் இணங்காதவிடத்து, தங்களுக்கு ஏற்றபடி வேறு இடங்களை பார்த்துக் கொள்கின்றார்கள். எல்லாக் காரியங்களையும் தங்களுடைய இஷ்டப்படி மிக உறுதியுடன் தெரிந்து கொண்டு, பின்னர் தங்கள் வாழ்வை தேவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். அதாவது, தேவனுடைய வார்த்தையை விட தங்கள் வழிகளை மேன்மைபடுத்த எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். தங்கள் எண்ணங்களை நிறைவேற்றப் பழகிக் கொண்ட தால், வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கையை குறித்து உணர்வற்று போய்விடுகின்றார்கள். நீங்களோ, அவ்வண்ணமாக தேவனை அறிய வில்லை. தேவனுக்கு எப்போதும் முதலிடத்தை கொடுங்கள். அவர் உங்களை நித் திய பேரின்பத்திற்கு நடத்திச் செல்வார்.

ஜெபம்:

ஒரு பரிசுத்த சந்ததியை உருவாக்கும்படி என்னை வேறுபிரித்த தேவனே, நீர் தந்த இரட்சிப்பின் மகத்துவத்தை உணர்ந்து வாழும்டிக்கு, உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 6:14-16