புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 18, 2023)

இடறல்கள் அகன்று போய்விடும்

ரோமர் 9:33

அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று


ஒரு வாலிபனானவன் வேலை செய்யும் இடத்திலே, தன் வயதிற்கொத்த ஒரு பெண்ணை சந்ததித்தான். நன்நடக்கையுள்ள (Decent) அந்த பெண், இந்த வாலிபனோடு நட்புள்ளவளாக இருக்க விரும்பினாள். அத னால், வேலை முடிந்த பின்பு மாலையிலே சந்திக்க முடியுமா என்று கேட் டாள். அதற்கு அவன் இன்று மாலை ஆலயத்திலே வேதபாடம் இருக் கின்றது நான் அங்கே போக வேண்டும் என்று கூறினான். அப்படியா னால் வருகின்ற வெள்ளி சந் திப்போம் என்றாள், அதற்கு அவன் பிரதி வெள்ளிதோறும் மாலையிலே ஜெபம் உண்டு என்று கூறினான். இப்படி யாக அவள் கூறிய நாட்க ளிலே, உபவாசம், ஜெபம், ஆராதனை என்று அவன் கூறிய போது, உனக்கு வாழ்க்கையே இல்லையா என்று கேட் டாள். அதற்கு அவன், இதுதான் என் வாழ்க்கை, இதிலேதான் நான் களிகூ ருகின்றேன் என்றான். அதற்கு அவள் இதிலே களிகூருகின்றாயா? வரு டத்தில் ஒரு முறைதான் நான் ஆலயத்திற்கு செல்வேன். அதுவே என க்கு போதும் என்று கூறி, அவனோடு பேசுவதை அவள் விட்டுவிட்டாள். பிரியமான சகோதர சகோதரிகளே, இன்றைய உலகிலே, ஆலயத்திற்கு செல்வதும், ஆண்டவர் இயேசுவின் நாமத்தை கூறுவதும் பலருக்கு இட றாலக இருக்கின்று. ஏன், தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள் ளும் சிலருக்கும் கூட அது ஆகாத காரியமாக இருக்கின்றது. ஆண்டவர் இயே சுவின் நாமத்தை கூறும் போது, பிசாசுகள் ஓடிச் சென்று விடுவதுபோல, அவருடைய நாமத்தை அறிந்தும் அவரை அன்பு செய்யாதவர்களும், அவருடைய நாமத்தைபற்றி பேசும் போது, அந்த இடத் தைவிட்டு அகன்று போய்விடுகின்றார்கள். இன்று அநேகருக்கு உலக த்தின் நாகரீகத்தை தழுவிக் கொண்டு, தங்கள் கண்போன போக்கிலே வாழும் உல்லாசமான வாழ்க்கையை வாழ்வதற்கு இயேசு வின் நாமம் தடையாக காணப்படுகின்றது. ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து அவர் வார்த்தையின்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்பவர்களுக்கோ, அவர் உறுதியான கன்மலையாக இருக்கின்றார். அந்தக் கன்மலையை தள்ளிவிடுகின்றவர்களுக்கு அவர் இடறிவிழும் கற்பாறையாக இருக்கின்றார். எனவே, உங்கள் வாழ்க்கையின் அடித்த ளமாக ஆண்டவர் இயேசுவை வைத்திருங்கள். பல இடறல்கள் உங்க ளைவிட்டு தானாகவே அகன்று போய்விடும்.

ஜெபம்:

அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் எனக்கு தந்தவரே, மறுபடியும் நான் அடிமைத்தனத்தின் கட்டுகளுக்கு உட்படாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 8:14