புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 17, 2023)

நன்நடக்கையை காண்பியுங்கள்

2 கொரிந்தியர் 5:9

அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.


பல்கலைக்ழகத்திற்கு சென்ற மாணவியொருத்தி, மாணவர்கள், மாண விகள், ஆசிரியர்கள் மத்தியிலே கர்த்தருக்கு பயந்து அவருடைய வழி யிலே நடப்பவளாக இருந்து வந்தாள். அதனால், பலர் அவளோடு கன த்தோடு பழகிக் கொண்டாலும், தங்கள் இருதயத்திலோ அவளை அவர் கள் அங்கீகரிக்கவில்லை. ஏனெனில், மாலை வேளைகளிலே அவர்கள் செல்லும் இடங்களுக்கு இவள் செல் வதில்லை. அவர்களின் ஆகாத சம் பாஷணைகளிலே இவள் பங்கேற் பதில்லை. நடை, உடை, பாவனை யிலே அவள் மற்றவர்களைவிட வித் தியா முள்ளவளாகவும் இருந்து வந்தாள். இதனால், தங்கள் ஆசை இச்சைகளை நிறைவேற்ற இவள் தடையாக இருக்கின்றாள் என்று அநே கமான மாணவ மாணவிகள் இவளுடைய ஐக்கியத்தை தவிர்த்துக் கொண் டார்கள். அவள் மனதிலே வேதனையிருந்தாலும், அவள் தான் கொண்ட நம்பிக்கையிலே மிகவும் உறுதியாக இருந்தாள். இந்த சம்பவத்தை பல மாதங்களாக கவனித்து வந்த கர்த்தருக்கு பயந்து வாழும் மாணவனொ ருவன், அவளைத் தன் வாழ்க்கையின் துணையாக ஏற்றுக் கொள்ளும்ப டிவிரும்பினான். பிரியமானவர்களே இன்றைய உலகிலே, ஏன் தேவ பிள்ளைகள் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற நண்பர்களை கண்டு பிடிக்க முடியாமல் இருக்கின்றார்கள்? தேனீக்கள் பூக்களை நாடிச் செல்லும். ஆனால், அழுக்குகள் இருக்கும் இடத்தை கொசுகள் நாடிச் செல்லும். சில தேவ பிள்ளைகள் தாங்கள் செல்லும் இடமெங்கும், தங்கள் நடை உடை பாவனையிலே தங்களை உலகத்தார் போல காண்பித்துக் கொள் கின்றார்கள். அதனால், உலகத்தார்களே அவர்களை கவர்ந்து கொள்கின்றார்கள். கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள் ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் என்று வார்த்தையை கேட்டி ருக்கின்றோம். ஆனால் இன்று தேவ ஆட்டுக்குடிகளை போல இருக்க வேண்டிய சில தேவ பிள்ளைகள், ஒநாயின் தோலை அணிந்து கொண்டு, உலக அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள விரும்புகின்றார்கள். இதனால் இவர்கள் சாத்தானின் கண்ணியிலே அகப்பட்டு, தங்கள் சுத்த மனசா ட்சியிலே சூடுண்டவர்களாக, பரிசுத்த வாழ்க்கைவிட்டு அகன்று, உலக போக்கிலே செல்லும் வாழ்க்கைத்துணையை தெரிந்து கொள்கின்றா ர்கள். பிரிமானவர்களே, நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாமலும், உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்காம லும் உங்கள் வாழ்வை காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தகப்பனே, நான் எங்கு சென்றாலும், என் நடை உடை பாவனை யாவும் உமக்கு உகந்ததாய் காணப்படுவதாக. உம்மைப் பிரியப்படுத்தும் இருதயத்தை எனக்கு தந்து உம் வழியில் நடத்திச் செல்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:5-9