புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 15, 2023)

யாரோடு இசைந்திருக்கின்றோம்?

எபேசியர் 5:14

ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு,


உயர்கல்வி கற்கும் சில மாணவர்கள், வழமைபோல தெருவோரமாக ஒரு இடத்திலே நின்று, வெள்ளிக்கிழமை இரவு தாங்கள் செல்லவிருக்கும் கேளிக்கை காட்சியைப் (Entertainment Show ) பற்றி சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மத்தியிலே ஆலயத்திற்கு செல்லும் வாலிபனும் அவர்களோடு இசைந்திருந்தான். ஆனால் மற்றய வாலிபர்களோ அவனை யார் என்று அறியாதிருந்தார்கள். எதிர்பாராத விதமாக அந்த ஊரில் வசிக்கும் பக்தியுள்ள வாலிபனொருவன் அவ்வழியாக வந்தான். அவனை தூரத்தில் கண்டதும், அந்த வாலிபர்கள், கடவுளை கண்ட புறம்போக்கன் வருகின்றான் என்று தங்களுக்குள்ளே அவனைக் குறித்து கேலி செய்து நகைத்தார்கள். அவர்கள் அருகிலே அந்த பக்தியுள்ள வாலிபனானவன் வந்த போது, அவர்கள் மத்தியிலே நின்று கொண்டிருக்கும் அந்த ஆலயத் திற்கு செல்லும் வாலிபனை அவன்; கண்டு, அவனோடு கைகுலுக்கி, கர்த்த ருக்கு ஸ்தோத்திரம் (Praise the Lord) என்று வாழ்த்துதலை கூறினான். அதைக் கேட்ட மற்றய வாலிபர்கள் அவனை நோக்கி: உனக்கெப்படி இவனைத் தெரியும் என்று கேட்டார்கள். அதற்கு அந்த பக்கியுள்ளவன், இவன் என்னோடு ஆலயத்திற்கு வருபவன். நாம் இருவரும் வாலிப கூட்டத்தில் இருக்கின்றோம் என்று கூறி தன் வழியிலே சென்றுவிட்டான். அந்த மாணவர்கள் யாவரும் தங்களோடு சேர்ந்து தங்களைப் போல நடந்து கொள்ளும் ஆலயத்திற்கு செல்லும் சக மாணவனை பார்த்து: இதைப்பற்றி எங்களுக்கு நீ ஒன்றும் கூறவில்லையே என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள். அதற்கு அவன்: ஓ! நான் சும்மா ஆலயத்திற்கு போய் வருகின்றேன் என்று சமாளிக்கத் தொடங்கினான். ஆம், பிரியமானவர் களே, உலகத்தார் முன்னிலையில் தேவ நாமமானது நம்மால் தூஷிக்கப்பட நாம் காரணராய் இராமலும், ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள் வோமாக. உங்கள் இச்சசைகளை உண்டு பண்ணுகின்ற உங்கள் தொடர்வுகளை துண்டித்து விடுங்கள். தேவனுடைய நாமம் உலகத் தார்களுக்குள்ளே உங்கள் மூல மாய்த் தூஷிக்கப்படுகிறதிற்கு இடங் கொடாதிருங்கள். இப்படிப்பட்ட கீழ்ப்படியாமைகளினாலே ஏன் உங்கள் மேல் தேவ கோபாக்கினை வருவித்துக் கொள்ள வேண்டும்? எனவே பெற்றுக் கொண்ட மகத்தான அழைப்பை காத்துக் கொள்ளுங்கள். உலகத்தார் முன்னிலையில் தேவனுக்கு சாட்சியாக வாழுங்கள்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, நான் பெற்றுக் கொண்ட உன்னதமான அழைப்பை மோசம் போக்கும் உலக மாம்ச இச்சைகளுக்காக இழந்து போய்விடாதபடிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப்போஸ்தலர் 1:8