புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 14, 2023)

குழப்பான நேரங்கள்....

தானியேல் 2:21

அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்;


நாட்டிலே நிலவும் சாதகமற்ற சூழ்நிலை காரணமாக ஒரு தகப்பனானவருடைய வியாபாரம் வெகுவாய் பாதிக்கப்பட்டது. கல்வி நிலை யங்கள் அநேக நாட்கள் பூட்டப்பட்டிருந்தது. அதனால் தன்னுடைய பிள்ளைகளுடைய எதிர்காலம் எப்படியாக இருக்குமோ என்று அவர் மனம் குழம்பிய நிலையிலே தன் நண்பராகிய போதகரொருவரிடம் தன் மனதின் கவலைகளை குறித்து எடுத்துரைத்தார். அதற்கு அந்தப் போத கரானவர், நண்பா: தானியேலும் அவனோடுகூட சில வாலிபர்களும், அவர்களுடைய இளவயதிலே பாபிலோன் ராஜாவினால் சிறை ப்பிடிக்கப்பட்டு, தங்கள் குடும்பத்தைவிட்டு, தேசத்தைவிட்டு பிரிக்கப்படடார்கள். பாபிலோன் தேசத்திலே அடிமைகளாக வைக்கப்பட்டு, ராஜாவிற்கு சேவை செய்யும் படி மூன்றரை வருஷம் கல்தேயரின் எழுத்தையும் பாiஷயையும் கற்று கொள்ளும்படி பணிக்கப்பட்டார்கள். அவர்கள் மாத்திரமல்ல, அங்கே இன்னும் பல வாலிபர்களும் இருந்தார்கள். அவர்களுக்கும் அதே பிரகாரமாக கற்றுக் கொடுத்தார்கள். இவைகள் யாவற்றின் மத்தியிலும் தானியேலும் அவனுடைய நண்பர்கள் மூவரும் தங்களுடைய தேவனா கிய கர்த்தரை மறந்து போகவில்லை. தாங்கள் அந்நியர்களால் தீட்டுப்படாதபடிக்கு, தங்கள் வாழ்க்கையை கர்த்தர் முன்னிலையிலே தூய்மையாக காத்துக் கொள்வதேயே தங்கள் வாழ்க்கையின் முதன்மையாக நோக்கமாக கொண்டிருந்தார்கள். குறித்த நாட்கள் நிறைவேறியபோது, அவர்கள் ராஜாவின் முன்பாக கொண்டு போகப்பட்டார்கள். ஞானத்துக் கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளி லும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். ஏனெனில், அந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவ னாக்கினார். அந்நிய தேசத்திலே, தேவனானவர் அவர்களை மேன்மைப் படுத்தினார். எனவே, நீ கலங்காமல், தேவனை பற்றியிரு. உன் பிள்ளைகளும் தேவனுடைய வழியிலே நடக்கும்படி கற்றுக்கொடு. அவர் முன்குறித்த நேரத்திலே யாவற்றையும் நேர்த்தியாகவும், செம்மையாகவும் செய்து முடிப்பார் என்று ஆலோசனை கூறினார்.

ஜெபம்:

வாக்குரைத்ததை செய்து முடிக்கின்ற தேவனே, நான் சாதகமற்ற சூழ்நிலைகளை கண்டு சோர்ந்து போகாமல், எப்போதும் உம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் உறுதியுள்ள உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:31