புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 13, 2023)

தேவ சித்தம் நிறைவேறும்

ஆதியாகமம் 45:7

தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.


பண்டைய எகிப்து ராஜ்யமானது அன்றைய உலகில் நாகரீகமான கலச் சாரமுடையதாகவும், படைப்பலமுள்ள ராஜ்யமாகவும் இருந்தது. அவர்க ளுடைய ராஜாவாகிய பார்வோன் மகா பெரிய சக்கரவத்தியாக இருந்து வந்தான். அவர்கள் மத்தியிலே, எபிரெய பிள்ளையாண்டனாகிய யோ சேப்பு, அவன் வாழ்ந்த தேசத்திலிருந்து, அநியாயமாக அடிமையாக விற் கப்பட்டு, செய்யாத குற்றத்தி ற்காக எகிப்தின் அரச சிறையிலே வைக் கப்பட்டிருந்தான். எகிப்து ராஜ்யத் தை பொறுத்தவரையில் அவன் அடி மையாகவும் குற்றவாளியாகவும் கரு தப்பட்டிருந்தான். அவனுடைய சொ ந்த அண்ணன்மார் தொடக்கம் பலரும் அவனுக்கு அநேக அநியாயங் களை செய்தார்கள். கர்த்தர் முன்குறித்த நாளிலே, யோசேப்பானவன் தீவி ரமாக சிறையிலிருந்து பார்வோனின் அரண்மனைக்கு பார்வோனினால் வரவழைக்கப்பட்டான். தேவனானவர்தாமே எகிப்து தேசத்தின் மேலும், அன்றைய உலகத்தின்மேலும் வரவிருக்கும் காரியங்களை யோசேப்பின் வழியாக பார்வோனிற்கும் அவனுடைய ஊழியக்காரருக்கும் வெளிப்ப டுத்தினார். அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொரு வன் உண்டோ என்றான். பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெ ல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப் போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொரு வனும் இல்லை என்று சொல்லி, நான் பார்வோன்; ஆனாலும் எகிப்து தேசத்திலுள்ள வர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையை யாவது தன் காலையாவது அசைக்கக் கூடாது என்று, எகிப்து தேசம் முழுவதும் யோசேப்பை அதிகாரியாக்கினான். அவனுடைய ராஜ்யத் திலே, பல கலைகளை கற்றவர்களும், ஞானவான்களும் அவனைச் சூழ இருந் தார்கள். பார்வோனின் ஆட்சிக்குள்ளே, அரண்மனை ஆசனங்களில் அம ரும் பல அதிகாரிகள் இருந்தார்கள். ஆனால் எந்தக் கலையையும் கற்றறியாத யோசேப்பு எல்லா இக்கட்டுகளிவும் தன்னுடைய தேவனா கிய கர்த்தரைவிட்டு விலகவில்லை. கர்த்தரும் அவன் செல்லுமிடமெ ங்கும் அவனோடு இருந்தார். யோசேப்பானவன் எகிப்திலே பெரியவ னாகிய போது, தன் ஆசனத்தைக் குறித்து மேன்மைபாராட்டாமல், தேவனானவர் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றும்படி என்னை அனுப் பினார் என்று தன்னை தேவன் முன்னிலையிலே தாழ்த்தினான். எனவே தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதை அறிந்த நாம் தேவ சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் நிர்ணயித்த காரியத்தை ஒருவாராலும் தடுக்க முடியாதென்பதை உணர்ந்த்வர்னாக, உம்முடைய சித்தத்திற்கு நான் என்னை ஒப்புக் கொடுத்து வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 1:37