புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 12, 2023)

ஆண்டவரின் ஆளுகை

சங்கீதம் 113:7

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.


ஒரு பிள்ளையானது பிறந்து சில நாட்களுக்குள்ளேயே, பெற்றோரானவர்கள் பதினெட்டு வருடங்களுக்கு பின்வரவிருக்கும் அந்தப் பிள்ளை யின் பட்டப்படிப்புக்கு வேண்டிய காப்புறுதியைக் குறித்து பெற்றோர், காப்புறுதி முகவரோடு பேசிக் கொண்டார்கள். திட்டமிட்டு வாழ்வதிலே தவறு இல்லை. ஆனால், மனிதர்கள் இன்று தேவனுடைய ஆளுகையை கனப்படுத்தாமல், உலகத்தின் போக்கிலே வாழும்படிக்கு தங்களையும் தங்களின் எதிர்காலங்களையும் ஒப்புக்கொடுத்து, அந்த வழியிலே பிள்ளைகளையும் பயி ற்சிவிக்கின்றார்கள். மேற்படிப்பை தொடரவிருக்கும் மகனானவனோ, சுமார் நான்கு வருடங்களுக்கு பின் எப்படிப்பட்ட வேலையை செய்யலாம் என்று அதிகமாக தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டி ருந்த அவனுடைய தந்தையார். அவனை நோக்கி மகனே: நான் பிறந்து வளர்ந்த தேசத்திலே ஏற்பட்ட உள்நாட்டு குழப்பங்களால், இடம்விட்டு இடம் பெயர்ந்தோம். நினைத்த படி எம்மால் எமது கல்வியை பூர்த்தி செய்ய முடிய வில்லை. சொந்த தேசத்தைவிட்டு இடம்பெயர்ந்து இந்த தேசத்தில் புதிதாக குடியேறி னோம். இந்த புதிய தேசத்திலே நீ கூறும் எந்தப் பல் கலைக்கழகத்திற்கும் நாங்கள் சென்று படிக்கவில்லை. ஆனால், இன்று, இந்தத் தேச த்திலே சிறந்து பல்கலைக்கழகங்களிலே படித்து பட்டம் பெற்ற வர்க ளும், எனக்கு கீழே வேலை பார்க்கின்றார்கள். எனக்கிருக்கும் ஞான த்தை குறித்து இங்கிருப்பவர்கள் ஆச்சரியப்படுகின்றார்கள். இவைகளெ ல்லாம் எப்படி ஆயிற்று? சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கரம் எங்களோடு இருந்தது. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனைப் பிர புக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகி றார். நான் உட்காரும் ஆசனம் மேன்மையானது அல்ல. மாறாக வான த்தையும் பூமியையும் படைத்த தேவனாகிய கர்த்தர் என்னுடைய பரம தந்தையாக இருப்பதே என்னுடைய மேன்மை என்று தன் மகனான வனிற்கு தகப்பனாவர் அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, தேவ னாகிய கர்த்தர் உங்கள் ஆண்டவரானால், அவர் உங்கள் வாழ்க் கையை ஆளுகை செய்யட்டும். உங்கள் எண்ணங்கள், அபிலாiஷகள், திட்டங்கள் யாவும் பிதாவாகிய தேவனுடைய சித்தத்திற்குளாக இருக் கட்டும். அந்த சித்தத்திற்குள்ளேயே நீங்கள் சமானதா னமான வாழ்க்கையை எப்போதுமே கண்டடைய முடியும்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, இந்த உலகத்தார் உலகத்தின் போக்கை கனம்பண்ணுகின்றார்கள், நானோ, எப்பொழுதும் உம்முடைய ஆளுகைக்குள் இருக்கும்படிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மல்கியா 1:6