புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 11, 2023)

கர்த்தரை கனப்படுத்துங்கள்

சங்கீதம் 34:9

அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை


சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகிய இளம் தம்பதிகள் தங்கள் குடும்பத்தை கட்ட ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருமே சிறு பிரயாசத்திலிருந்தே விசுவாசத்திலே உறுதியாய் வளரக்கப்பட்டு, ஆலயத்தில் உதவி ஊழியங்களிலே உற்சாகமாக கலந்து கொண்டு வந்தவர்கள். அவர்களி ருவரும் புதிதாக குடியேறிய நாட்டிலே, கணவனானவன் நல்ல ஒரு உத் தியோகத்தை செய்து வந்தான். தங்களுடைய வருவாயின்படி வீடொன் றையும், புதிய வாகனமொன்றையும் வங்கி கடனுதவியோடு கொள்வனவு செய்தார் கள். சில மாதங்கள் சென்ற பின்பு, கணவனானவனின் வேலைதளத் திலே, ஞாயிற்று கிழமையன்று வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டான். அவர்களுடைய புதிய வாழ்க்கை முறைக்கு அந்த வேலை அவசியமாக இருந்தது. அத்தோடு, அப்படிப் பட்ட சம்பளத்தோடும் சலுகைகளோடும் இன்னுமொரு வேலையொன் றையெடுப்பது கடினமானது என்று இருவரும் அறிந்திருந் தார்கள். அப் படியிருந்தும், அந்தக் கணவனானவன், தன்னுடைய இயக் குனரை அணுகி, ஞாயிற்றுக் கிழமைகளிலே தனக்கு வேலை செய்ய முடியாது என்று பணிவுடன் தெரியப்படுத்தினான். வார இறுதிநாட்க ளிலே வேலை செய்தால், இரட்டிப்பான சம்பளம் கிடைக்கும், இந்தக் கிழமை மட்டும் வேலை செய் என்று இயக்குனர் பதிலளித்தார். அத ற்கு அவன்: ஐயா, நான் செய்யும் வேலையை நான் கண்ணியமாகவும், நேர்மையா கவும் செய்து வருகின்றேன். இந்தக் கம்பனியைக் குறித்து எனக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. ஆனால், நான் என்னுடைய தேவனை ஆராதிக்கின்ற நாளை வேறொன்றிற்கும் கொடுக்கத் தயாராக இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய ஆரம்பம் உண்டு. நான் ஒருநாள் கூட நான் அப்படி செய்ய மாட்டேன் என்று திட்டமாக கூறிவிட்டான். பிரியமானவர்களே, இந்நாட்கள் பிரதிஷ;டைகள், அர்பணிப்புக்கள் யாவுமே மிக அற்பமான காரியங்களுக்காக உடைக்கப்படுகின்ற நாட்கள். நீங்களோ தேவனைக் குறித்து ஆரம்பித்தில் கொண்ட வைராக்கியத்தை விட்டு விடாதிருங்கள். வாழ்க்கையில் பொருளாதார நஷ;டம் வந்தாலும், மனிதர்களைக் குறித்தும் இந்த உலக தேவைகளைக் குறித்தும் பயப்ப டாதிருங்கள். ஆத்துமாவை பரலோகத்தில் சேர்க்க வல்லவருக்கே நீங் கள் எல்லா காரியங்களிலும் பயந்திருங்கள். பூமியும் அதன் நிறைவும் அதன் குடிகளும் கர்த்தருடையது. கர்த்தருக்கு பயந்து, அவருடைய வழிகளிலே நடக்கின்றவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவு படுவதில்லை.

ஜெபம்:

என்னை உம்முடைய பிள்ளையாக்கிய என் தேவனாகிய கர்த் தாவே, எக்காலத்திலும், எல்லா காரியங்களிலும் நான் உமக்கே முதலிட த்தை கொடுக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 10:28