புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 10, 2023)

பிரித்தெடுக்கப்பட்ட சந்ததி

1 சாமுவேல் 2:30

என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள்


நியாயாதிபதிகளின் நாட்களிலே, ஏலி என்னும் ஆசாரியன் கர்த்தருடைய சமுகத்திலே ஊழியம் செய்து வந்தான். அவனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஆசாரிய ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டவர்களாக இருந்தும் கர்த்தரை அறியாதவர்களாக வளர்ந்து வந்தார்கள். தேவ ஆலயத்திலே வளர்க்கப்பட்டும் அவர்கள் துன்மார்க்கராக இருந்தார்கள். அது எப்படி ஆயிற்று? தன் பிள்ளைகளின் மீறுத ல்களை ஆசாரியனாகிய ஏலி அறியாதிருந்தானோ? இல்லை, அவன் நன்றாக அறிந்திருந்தான். அவன் தன் குமாரருக்கு அறிவுரை கூறி னானோ? ஆம், 'என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல. கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறத ற்குக் காரணமாயிருக்கிறீர்களே.' என்று கூறினான். அவர்கள் தேவ னுடைய ஆலயத்தையும், பலிகளையும் தீட்டுபடுத்துவதைக்குறித்து மேற்கொண்டு ஏதவாது செய்தானோ? இல்லை, ஏலியானவன், தன் உள்ளத்திலே கர்த்தரைப் பார்க்கிலும் தன் குமாரரை மதித்து வந்தான். (1 சாமு 2:29). தேவன் பரிசுத்த சந்ததியை உருவாக்கும்படி சிலரை தமக்கென வேறு பிரித்திருக்கின்றார். ஆரம்ப காலங்களிலே அவர்களும் வாஞ்சையோடு தேவனுடைய கிரியைகளை நேர்த்தியாக நடத்தி வந்தார்கள். ஆனால், பிள்ளைகள் வளர்ந்து வரும் போது, நாம் அவர்களுக்கு எதையும் தடை பண்ணக் கூடாது, அவர்கள் அனுபவித்து திருந்த வேண்டும் என்று பிள்ளைகளுடைய போக்கிலே அவர்களை விட்டுவிடுகின்றார்கள். ஏலியானவனைப் போல, மேலோட்டமாக அறிவுரைகளை கூறுகின்றார்கள் ஆனால் அவர்கள் உள்ளத்திலோ தங்கள் பிள்ளைகளின் வழிகளை ஆதரித்து, இளமைக் காலத்தில், பிள்ளைகள் அனுபவிக்க வேண்டியவைகளை அனுபவிக்கட்டும் என்று பாராமுக மாக விட்டுவிடுகின்றார்கள். நம்முடைய தேவனுக்கு மறைவான காரியம் உண்டோ? இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவன் மனிதர்களுடைய சிந்தையை அறியாரோ? என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப் படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அசட்டைத்தனத்தினாலே பிரித்தெடுக்கப்பட்ட தூய சந்ததி, தேவனை விட்டு பிரிந்து கீழ்படியா மையின் சந்ததியாக மாறிவிடுகின்றது. நாமோ, அவண்ணமாக பிரிந்து போகாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருப்போமாக.

ஜெபம்:

பரிசுத்த சந்ததியை உருவாக்க என்னை வேறுபிரித்த தேவனே, நானும் என் வீட்டாரும் மனதார உம்மையே சேவிக்கும்படி உமது ஆலோசனையின் வழியிலே நடக்க எனக்கு உணர்வுள்ள இருயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 10:32-33