புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 07, 2023)

பிரகாசமுள்ள மனக்கண்கள்

சங்கீதம் 19:8

கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.


ஒரு விசுவாசியானவன், மாலை வேளையிலே தெரு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, தன் குடும்பத்திலே இருக்கும் பல தேவைகளையும், அவைகளைத் தான் எப்படி சந்திக்கப் போகின்றேன் என்பதைக் குறித்து சிந்தித்தபடி சென்று கொண்டிருந்தான். அந்த விசுவாசிக்கு முன்பாக சென்ற மனிதனொருவர் தன் சட்டைப் பைக்குள்; வைத்திருந்த பணத்தை கீழே தவறுதலாக விழுத்திவிட்டு, போய்கொண்டிருந்தார். விசுவாசியானவன் அந்த இடத்தை கடந்து செல்லும் போது, கணி சமான தொகையுள்ள பணக்கட்டுக்களானது அங்கே விழுதிருப்பதை கண்டான். அந்த மனிதனானவர் சற்று தொலைவிலே முன்னாக சென்று கொண்டிருந்தார். தெரு விலே வேறு யாரும் இல்லை. அவன் தன் கண்கள் கண்டதை தன்னை அறியாமலே இச்சித் தான். எனினும், அவனுடைய உள்ளான மனிதனிலிருந்து 'நீ வானம் பூமி படைத்த பிதாவாகிய தேவனுக்கு பிள்ளை' என்று சத்தம் தொனித்தது. அவனுடைய சுத்தமச்னசாட்சி அவன் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. உடடினடையாக அவன் தன் சிந்தையை மாற்றிக் கொண்டு, அந்தப் பணக்கட்டை தனக்கு முன்பாக சென்று கொண்டிருந்த மனிதனிடம் கொடுத்து விட்டான். 'என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடை பண்ணவில்லை' என்று பிரசங்கி கூறினார். கண்களின் இச்சை பரம பிதாவினால் உண்டானதல்ல அது இந்த உலகத்தினால் உண்டானது. மனிதனுடைய கண்கள் அனுதினமும் பல காரியங்களை காண்கின்றது. அந்த வேளைகளிலே அவனுடைய மனக்கண்கள் இருளடைந்திருக்குமென்றால், அவன் காண்பதெல்லாவற்றையும் இச்சிக்கின்றவனாக இருப்பான். மனக் கண்கள் தெளிவாக இருக்கும்போது, அவனுடைய கண்களுக்கு முன்பாக அவன் தன் கர்த்தரையே வைத்திருப்பான். பிரிய மானவர்களே, தேவனுடைய கற்பகைள் தூய்மையாவைகளை நாம் சிந்திக்கும்படி நம்மை தூண்டுகின்றது. அந்த கற்பனைகளைப் பற்றிக் கொள்கின்றவர்களின் மனக்கண்கள் தெளிவாக பார்ப்பதால், இந்த உலகத்தினால் உண்டாகும் இச்சைகளுக்கு நாம் நீங்கலாக்கப்படுகின்றோம். நாம் இருளிலே நடங்கின்றவர்கள் அல்லர். நாம் பகலுக்குரியவர்கள். நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாக இருக்கின்றோம். எனவே இருளின் அதிகாரம் நம் மனக்கண்களை குருடுபடுத்த முடியாது. அனுதினமும் கர்த்தருடைய வேதத்தை தியானியுங்கள். பிரகாசமுள்ள மனக்கண்களை வாஞ்சியுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தகப்பனே, இந்த உலகத்தினால் உண்டானவைகளை நான் இச்சிக்காமல், உம்முடைய சித்தத்தின்படி நான் வாழும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:15-17

Category Tags: