புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 01, 2023)

பெற்றுக் கொண்ட ஆசீர்வாதங்கள்

நீதிமொழிகள் 4:13

புத்திமதியை உறுதியாய்ப் பற் றிக்கொள், அதை விட்டுவிடா தே; அதைக்காத்துக் கொள், அதுவே உனக்கு ஜீவன்.


ஒரு தகப்பனானவர், தன்னுடைய மகனானவனுடைய பதினெட்டாவது பிறந்தநாளன்று, அதி நவீனமான விலையுயர்ந்த கைதொலைபேசி சாத னத்தை பரிசுப்பொருளாக கொடுத்திருந்தார். அதைப் பெற்றுக் கொண்ட மகனானவனுடைய மனதிலே பேரானந்தம். அந்த செய்தியை தன் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டான். அந்த சாதனத்தை அவன் எப்போதும் தன்னோடு வைத் துக் கொள்வான். மகனானவ னைப் பொறுத்த வரையில் அது அவனுக்கு கிடைத்த ஆசீர்வா தமாக இருந்தது. ஆனால் அது ஆசீர்வாதம் என்பது அந்தப் பரி சுப் பொருளின் முதற்பகுதி. அதன் இரண்டாவது பகுதியா னது, அவன் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதத்தை தன் வாழ் விலே நன்மையுண்டாகும்படி உபயோகம் செய்ய வேண்டுமெனபதே. தவறான காரியங்களுக்கும், கல்வி கற்க்கும் நாட்களிலே நேரத்தை விரயம் செய்யாதபடிக்கும், தன் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதபடி க்கும் காத்துக் கொள்ள வேண்டும் என்று தகப்பனானவர் தன் மகனா னவனுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார். இந்தப் பூமியிலே வாழும் தேவ பிள்ளைகளும், இந்தப் பூமிக்குரிய சில ஆசீர்வாதங்களை தங்கள் பரம பிதாவினிடத்திலிருந்து பெற்றுக் கொள்கின்றார்கள். அது உயர் கல்வியாக இருக்கலாம் அல்லது அரு மையான வேலையாக இருக்கலாம். இவை யாவும் இந்த உலகத்தின் ஐசுவரியத்தை பெருக்குவதற்கே வழிவகுக்கின்றது. அதைக் குறித்து தேவ பிள்ளைகள் சபை நடுவே சாட்சி பகர்ந்து கொள்கின்றார்கள். அது ஆசீர்வாத்ததின் முதற் பகுதி. இரண்டாவது பகுதியாக, அந்த ஆசீர்வாதத்தை கொடுத்த தேவனானவர் அவைகளை எப்படி உபயோ கிக்க வேண்டும் என்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் தெளி வாக கொடுத்திருக்கின்றார். எனவே நாம் தேவனால் பெற்ற ஆசீர் வாதங்களை குறித்து சந்தோஷமடைவதோடு நிறுத்திவிடாமல், அவை களை எப்படி நாம் ஆளுகை செய்ய வேண்டும் என்பதைக் கு றித்து சத்திய வேதம் கூறும் ஆலோசனைகளின் வழியிலே நாம் வாழ வேண் டும். ஆசீர்வாதங்களை நாம் நம் சொந்த வழிகளால் சாபமாக்கிக் கொள் ளாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். எனவே நாம் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதங்களை எப்படியாக உபயோகின்றோம் என்பதைக் குறித்து மிகுந்த விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, நான் உம்மிடத்தில் பெற்றுக் கொண்டவவைகளை உம்முடைய வார்த்தையின்படி காத்துக் கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 30:20