புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 31, 2023)

விசுவாசத்தினால் உண்டாகும் கிரியை

யாக்கோபு 2:17

அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.


மேற்கத்தைய நாடொன்றிலே வசதியாக வாழ்ந்து வரும் விசுவா சியொருவன், தேவன் தன்னை ஆசீர்வதித்து தன் கையின் பிரயாசத்தை பெருகப் பண்ணினார் என்று பலர் முன்னிலையிலே சாட்சி பகிர்ந்தான். சில ஆண்டுகளுக்கு பின்னர், தான் வசித்தவந்த வீட்டோடு, தன் முத லீட்டிற்காக இன்னுமொரு வீட்டை வாங்குவதற்குரிய ஒழுங்குகளை செய்து கொண்டிருக்கும் வேளை யிலே, அவன் தென் ஆசியாவிலு ள்ள ஒரு நாட்டிற்கு சென்றிருந் தான். அந்நாட்களிலே, பின்தங் கிய கிராமமொன்றுக்கு அவன் சென்ற வேளையிலே, சகவிசுவாச களில் சிலர் வறுமையில் வாடுவ தையும், தங்குவ தற்கு ஒழுங்கான கொட்டில்கள்கூட இல்லாமல் இருக்கின்ற காட்சியை நேரில் கண்டதும், தன் இருதயத்தில் குத்துண்டான். அன்று இராத்திரியிலே அவன் தன் நிலைiயைக் குறித்து வெகுவாய் வேதனைப்பட்டான். கர்த்தர் என் கையின் பிரயாசத்தை பெருக்கப்பண்ணினார். ஆனால் தன் இருதயத் தின் தயாளம் வறுமை நிலையிலே இருக்கின்றது என்று உணர்ந்து கொண்டான். என் சந்ததி பல ஆண்டுகளுக்கு சுகமாய் இருக்கும்படி என் எல்லைகளை விஸ்திரப் படுத்துகின்றேன். ஆனால் ஒருநேரம் சாப் பிடுவதற்கும், பாதுகாப்பாய் ஒரு இரவு உறங்குவதற்கும், மழை வெயி லுக்கு ஒதுங்குவதற்கும் வழியின்றி சில தேவ பிள்ளைகள் தவிக்கின்றார்கள் என்பதை நினைத்து மனவேதனை அடைந்தான். அந்தப் பயணம் அவன் மனக்கண்களை பிரகாசமடையச் செய்தது. என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரி யைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங் களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங் கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண் டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜன மென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன் னிலேதானே செத்ததாயிருக்கும் என்று பரிசுத்த வேதாகம் நமக்கு அறிவுரை கூறுகி ன்றது. எனவே உங்கள் செல்வம் உங்களுடையது. அதை எப்படி செலவு செய்யப்போகின்றீர்கள் என்ற தீர்மானமும் உங்களுடையது. ஆனால் கிரியையில்லாத விசுவாசம் செத்தது என்பதை நன்றாக அறிந்து கொள் ளுங்கள்.

ஜெபம்:

இரக்கதில் ஐசுவரியமுள்ள தேவனேஇ மகா பரிசுத்தமான விசுவா சத்தின்மேல் நான் என்னை உறுதிப்படுத்திக்கொண்டுஇ விசுவாசத்தின் கிரி யைகளை நடப்பித்து முடிக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:13