புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 30, 2023)

அருமையான விசுவாசத்தை பெற்றவர்கள்

1 தீமோத்தேயு 6:10

சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனை களாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.


பொருள் அல்ல, பொருளாசையே ஆகாதது. பணம் அல்ல பண ஆசையே கூடாதது என்று சில மனிதர்கள் சொல்லிக் கொள்வதை நாம் கேட்டிரு க்கின்றோம். அதில் உண்மை உண்டு. செல்வம் நிறைவந்தவர்களெல்லோ ரும் பொருளாசையுடையவர்களல்லர். அதே வேளையிலே ஏழைகள் எல்லோரும் பொருளாசையில்ல்லாதவர்களுமல்லர். ஆனால் ஒரு மனித னானாவன், அவன் ஆசைப்படுவதையே தன் வாழ்வில் சேர்த்து, பாதுகாத்து வை க்கின்றான். ஒரு மனிதனானவன், தன் தேவைக்கு ஒரு காரை வாங்கினான். பின்னர் வீட்டாரின் தேவைக்கென இன் னுமொரு காரை வாங்கினான். பனிக் காலங்களில் ஒடுவதற்கு என்று ஒரு கனரகமாயிருக்கின்ற காரை வாங்கி னான். தூரப்பிரயாணம் செல்வதற்கெ ன்று வேறொரு வசதியான காரை வாங்கினான். இப்படியாக காரை வாங் குவதற்கு காரணங்களை தேடினான். ஏனெனில் அவன் உள்ளத்தில் காரை குறித்த ஆசை இருக்கின்றது, அதனால் அவன் அவைகளை தனதாக்கிக் கொள்கின்றான். அதுபோலவே ஒருவன் பணத்தை தனக் கென்று சேர்த்து கொள்ளுபடிக்கு அதை குறித்த ஆசையில்லாமல் அவன் அதை சேர்த்து வைப்பதில்லை. அவனவன் தனக்கு பொருளா சை உண்டா என்று தன்னைத்தானே ஆராய்ந்தறிவது அவனுக்கு நல் லது. நான் உங்களுடைய நியாயாதிபதியல்ல, அதுபோது நீங்களும் என்னுடைய நியாயாதிபதியல்ல. ஆனால் எல்லாவற்றையும் அறி ந்த, நீதியுள்ள நியாயாதிபதியாகிய ஆண்டவர் இயேசு, ஐசுவரிமுள்ளவர்க ளை எச்சரிக்கையாய் இருக்கும்படி கூறியிருக்கின்றார். மேலும், பண ஆசையானது எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச் சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங் களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் பரிசுத்த வேத த்திலே வாசிக்கின்றோம். தேவ பிள்ளைகள் விசுவாசத்தைவிட்டு வழுவி ப்போவதற்கு பணம் ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது என்பதை நீங்கள் நன்றாக அறிந்து கொள்ளுங்கள். எனவே எல்லாக் காவலோ டும் உங்கள் இருதயத்தைக் காத்துக் கொள்ளுங்கள். அருமையான விசு வாசத்தைப் பெற்ற சகோதர சகோதரிகளே, தேவ வார்த்தைகளால் கொடு க்க்பட்டிருக்கும் ஆலோசனைகள் விருதாவாய் கூறப்படவில்லை. ஆண் டவர் இயேசு நம்முடைய விசுவாசத்தை காத்துக் கொள்ளும்படிக்கு கூறிய எச்சரிப்புக் களை அற்பமாக எண்ணாமல், விசுவாசத்தை காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக பிதாவே, அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நான் இழுப்புண்டு என்; உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரி க்கை யாயிருக்கும்படி பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்ளுவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யூதா 1:20-25