புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 29, 2023)

வழுவிப்போகாத இருதயம்

கொலோசேயர் 3:2

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளை யே நாடுங்கள்.


பல மனிதர்கள் இந்த உலகிலே வெகுவாய் பிரயாசப்படுகின்றார்கள். இளமைக் காலங்களிலே, தேவனை தேடுவதைவிட கல்வி கற்பதே அல் லது தேவனை தேடுவதைவிட வேலை செய்வதே முதன்மையானது என்று அதற்கேற்ப கிரியைகளை நடப்பிக்கின்றார்கள். ஒருவன் முதலா வது தேவனுடைய ராஜ்யத்தையும் அவ ருடைய நீதியையும் தேடுவதைவிட்டு, அதை இரண்டாம் இடத்திற்கு தள்ளி விடும் போது, அவன் வாழ்வில் அவன் மேன்மைப்படுத்தும் காரியமானது அவன் இருதயத்திலே முதலாவது இட த்தை பெற்று விடுகின்றது. எது ஒரு மனி தனுடைய இரு தயத்தில் முதன்மையான இடத்தை பெற்றுக் கொள்கி ன்றதோ, அதுவே அவனுடைய பொக்கிஷமாக மாறிவிடுகின்றது. பரம பிதா நம்மை பிழைப்பூட்டுகின்றார் என்பதன் கருப்பொருளை மறந்து போய்விடுகின்றார்கள். தேவனுக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும் மகிமையையும், இந்த உலகத்தின் கல்விக்கும், வேலைக்கும், வேலை தலத்தின் எஜமான்களுக்கும் கொடுத்துவிடுகின்றார்கள். ஏன் மனிதர்கள் அப்படியாக பிரயாசப்படுகின்றார்கள்? அவர்களின் அடிப்படை தேவை என்ன? பணம் மற்றும் பொருள் போன்ற வைகளே தங்களையும் தங்கள் சந்ததியையும் பிழைப்பூட்டும் என்று தேவனுடைய இடத்தை அவைக ளுக்கு கொடுப்பதால், பொருளாசையாகிய விக்கிரக ஆராதனைக்கு தங் களை ஒப்புக் கொடுத்து விடுகின்றார்கள். ஒருவேளை இந்த உலகத்தி லுள்ள மனிதர்கள் தங்கள் அறியாமையினாலே இவைகளை நடப்பிக்க லாம். ஆனால், தேவனை அறிந்த தேவபிள்ளைகள், விசுவாச மார் க்கத்தார் இவைகள் நன்கு அறிந்தும், இவைகளுக்கு தங்களை ஒப்புக் கொடுக்கும்போது, தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசத்தை பணத்தின் மேலும், பொருளின் மேலும், தங்கள் பிரயாசத்தின்மேலும் வைத்து விடு கின்றார்கள். இவர்கள் தேவபிள்ளைகள் தான் ஆனால் விசுவாசத்தை விட்டு வழுவிப்போ இடங்கொடுத்த 'கீழ்படியாமையின் பிள்ளைகள்' என்ற பெயரை தங்களுக்கு தாங்களே தரித்துக் கொள்கின்றார்கள். தங் களை பரிதாப நிலைமையை உணர்ந்து மனந்திரும்பாதவர்கள், தேவ கோபாக்கினையை தங்கள்மேல் வரவழைத்துக் கொள்கின்றார்கள். என வே, பிரிமானவர்களே, இந்த பூமிக்குரியவைகள் நிலையற்றவைகள், அவைகளை பற்றிக் கொள்கின்றவர்களும் அப்படியே இருக்கின்றார்கள். நீங்களோ, நிலையான பரலோகத்திற்குரியவைகளை நாடித்தேடுங்கள்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, நான் பொருளாசை பற்றிக் கொண்டு விசுவாசத்தைவிட்டு வழுவிப்போகாதாபடிக்கு உலக ஆசைகளை உண்டுபண்ணும் அவயவங்களை அழித்துப்போட கிருபை செய்வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33