தியானம் (வைகாசி 27, 2023)
விசுவாச அறிக்கை
ரோமர் 10:10
இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
திருமண விழாவன்று, மணவாளனானவன், பலர் முன்னிலையில் தன் உரையை ஆரம்பித்தான். விழாவின் நாயகனாகிய அவனுடைய உரை யை கேட்பதற்கு யாவரும் தங்கள் கவனைத்தை அவன் பக்கமாகத் திருப்பிக் கொண்டார்கள். தன் மனைவியை எப்படியான அன்பு செய்து, அவளை கண் கலங்காமல் காத்துக் கொள்வேன் என்று அழகிய கவிதை நடையிலே அவன் சொற்பழிவாற் றினான். பலர் முன்னிலையில் நல்ல அறிக்கை செய்தான். விரு ந்தினரும்கரகோஷங்களை எழுப் பினார்கள். விழா முடிவடைந்து, இளம் தம்பதியின ரின் ஆரம்ப நாட்கள் மிகவும் நன் றாக இருந்தது. ஆனால், நாட்கள் கடந்து சென்றாலும் போது, அந்த புருஷனானவன் ஆற்றிய உரைக்கும் அவன் தன் மனைவியை நடத்திக் கொள்ளும் முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதிருந்தது. ஆனாலும் அவளை அவன் தன் மனைவி என்றே சொல்லிக் கொள்வான். இப்படிப்பட்ட அறிக்கையை குறித்து நீங்கள் என்ன சொல்வீர்கள்? நல்ல அறிக்கைகள் சொல்வது மட்டுமல்ல, அவைகளை வாழ்விலே செயல்படுத்த வேண்டும். மிக முக்கியமாக, அந்த அறிக்கையாளரின் உண்மைத் தன்மையானது, வாழ்க்கையிலே சாவல்களும் நெருக்கங்களும் உண்டாகும்போது வெளிப்படும். என்ன வென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கை யிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இரு தயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருத யத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக் கைபண்ணப்படும். (ரோமர் 10:9-10) என்று வேதம் கூறுகின்றது. கருப் பொருளாவது, விசுவாச அறிக்கையானது வாழ்விலே செயல்படுத்தப் படல் வேண்டும்.இன்று பல மனிதர்கள் தேவனை இருக்கின்றார் என் றும், இயேசு இரட்சகர் என்றும் அறிக்கையிடுகின்றார்கள். தேவன் ஒரு வர் உண்டென்று பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின் றன. நாம் ஆண்டவர் இயேசுவை இரட்சகர் என்று விசுவாசித்தால், வாயினாலே அறிக்கை பண்ண வேண்டும். அந்த விசுவாச அறிக்கையானது நம் வாழ் வின் எல்லா சூழ்நிலைகளிலும் நம் கிரியைகளினாலே உறுதிப் பண்ண ப்பட வேண்டும். உயர்விலும், தாழ்விலும், வேதனையிலும், சோதனை யிலும், அந்த விசுவாச அறிக்கையின்படி நற்சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். தேவன் முன்னினையிலே உண்மையு ள்ளவர் களாக இருக்க வேண்டும். அவரை உண்மையாய் விசுவாசித்து, அவருடைய வார்த்தையின் வழியிலே வாழ்கின்றவனெவனோ அவன் வெட்கப்படு வதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
ஜெபம்:
அன்பின் தேவனே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதய த்தின் தியானங்களும், என் வாழ்விவே நான் செய்யும் கிரியைகளும் உம்முடைய வார்த்தையின்படி ஒத்திருக்க கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 14:1-2