புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 26, 2023)

விசுவாசியாயிரு

யோவான் 20:29

காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.


'அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு' என்று மரணத்தை வென்று உயிர்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே, தம்முடைய சீஷனாகிய தோமாவிற்கு கூறினார். சுமார் மூன்றரை வருடங்கள் கர்த் தரோடுகூட இருந்தும், அவர் சீஷர்களுக்கு சொன்னதையும், தீர்க்கத ரிசிகளால் மெசியாவைக் குறித்து கூறின வார்த்தைகளையும் அவனும், அவனோடிருந்தவர்களுக்கும் விசுவாசி ப்பது கடினமாக இருந்தது. காண்பதை விசுவாசிப்பது விசுவாசம் அல்ல. நாம் காணாத பரலோகத்தை விசுவாசிக்கி ன்றோம். ஒருநாள் நாம் பரலோகிலே கர்த்தரோடு வாழும் போது, நாம் பர லோகத்தை காண்பதினால் பரலோக மொன்று இருக்கின்றது என்று விசுவாசிக்கத் தேவையில்லை. மனுஷகு மாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இந்த வார்த்தையானது அவரை விசுவாசியாத உலகத்தாரை குறித்ததல்ல. அவரை விசுவாசித்து ஏற்றுக் கொண்ட நம்மை குறித்தது. நம்முடைய விசுவாசம் ஒழிந்து போவது தேவனுடைய சித்தமல்லவே. மனதிலே குழப்பமும் நிலையற்றவர்களாகிய விசுவாசிகள் தங்கள் வழிகளையும், தெரிவுகளையும் குறி த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இவைகளை நமக்கு முன்னறிவித்திருக்கின்றார். ஏன் விசுவாசிகள் விசுவாசத்தை விட்டு விலகிப்போகி ன்றார்கள்? எப்படியாக அவர்கள் வழுவிப்போகின்றா ர்கள்? அவர்கள் திட்டமிட்டு செய்கின்றார்களா? பொதுவாக எவரும் திட்டமிட்டு, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவதில்லை. எப்பொழுது விசு வாசிகள் தேவனுடைய வார்த்தையைக் குறித்து, தேவ வார்த்தையின் ஒரு சிறு எழுத்தை, ஒரு எழுத்தின் உறுப்பை கூட அற்பமாக எண்ணு கின்றார்களோ, அந்த வேளையிலே விசுவாசத்தைவிட்டு வழுவிப்போ கின்ற இருதயத்தை தங்களிலே உருவாக்கிவிடுகின்றார்கள். விசுவாச த்தைவிட்டு வழுவிப்போகும் போது, நாம் முன்பு இருந்தது போலவே இருக்கின்றோம். அதைவிட வசதியாக இருக்கின்றோம் என்று விசு வாசிகள் எண்ணிக் கொள்கின்றார்கள். அவர்கள் தேவன் நீடிய பொறு மையுள்ளவராக இருக்கின்றார் என்பதை மறந்து, தேவ கிருபையை அசட்டை செய்ய ஆரம்பிக்கின்றார்கள். காலப்போக்கிலே, அவர்கள் தங்கள் இருதயத்தில் விதைத்த விதையானது முளைத்து, கசப்பான கனிகளை கொடுக்கும் போது, நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று தங்களைக் குறித்து ஆச்சரியப்படுகின்றார்கள். தேவன் உரைத்தவைகளை உறுதியாக இறுகப் பற்றிக் கொண்டு அவர் வழியிலே நடவுங்கள்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, நான் உம் வார்த்தைகளின் வழியை விட்டு சற்றும் விலகிப் போகாதபடிக்கு எனக்கு நீர் உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-2