தியானம் (வைகாசி 25, 2023)
காலத்தை பிரயோஜனப்படுத்துங்கள்
எபேசியர் 5:16
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஒரு தகப்பனானவர், வார இறுதி நாட்களிலே, வேலைக்கு சென்றால் நல்ல இடங்களிலே இரட்டிப்பான ஊதியத்தோடு வேலை செய்யலாம் என்று அறிந்திருந்தும், கர்த்தருடைய நாளை பிரதிஷ;டையோடு அனு சரிக்க வேண்டும் என்ற வாஞ்சையினால் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வரும் நல்ல வேலைகளை தவிர்த்துக் கொண்டார். ஏனnனில், கிறிஸ்துவாகிய கன்மலையில் தன் குடும்பம் கட்டப்பட்டிருக்க வேண் டும் என்ற நோக்கம் அவர் மனதிலே பற்றியெரிந்தது. இப்படியாக காலங்கள் கடந்து சென்று அவருடைய பிள்ளைகள் வளர்ந்து, படித்து பட்டம் பெற்ற பின்பு, நல்ல உத்தியோகங்களிலே அமர்ந்தார்கள். இப்போது, அவர்கள் உல்லாசப் பயணம் செல்ல வேண்டும் என்று, கர்த்தரை அறியாத நண் பர்களோடு சேர்ந்து, நாடுவிட்டு நாடு சென்று, சில வார இறுதி நாட்களை, கடற்கரைகளிலும், உல்லாச வளாகங்களி லும் (Tourist Compound) களித்து வந்தார்கள். இந்த சம்பவங்களை சற்றுத் தியானித்துப்பாருங்கள். 1. பெற்றோர் விபரமறியாமல், மதியீனமாக தங்கள் உழைப்பை கருத்திற் கொள்ளாமல், கர்த்தருடைய நாளை அனுசரித்து வந்தார்களா? அல்லது 2. பிள்ளைகள் கர்த்தரை அறியாமல் வாழும் வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் வழிகளை தெரிந்து கொண்டிருக்கின்றார்களா? இந்த உலகமானது இருளிலே இருக்கின்றது. உலகத்திற்கு வந்த மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்து வழியாக நாம் அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளிக்கு அழைக்கப்பட்டோம். ஏதேனிலே ஏவாளை வஞ்சித்த வஞ்சகத்தின் ஆவி இப்போதும் கிரியை செய்து வருகின்றது. அந்த ஆவியானது காரிருளிலிருப்பவர்களை வஞ்சிக்கத் தேவையில்லை. ஆனால், தேவ பிள்ளைகளை வஞ்சிக்கும்படி அவர்கள் மத்தியிலே கிரியைகளை நடப்பித்து வருகின்றது. உலகம் தரும் இன்பத்தை அறியாமல் வாழ்ந்த நாட்கள் அநாகரீகம் என்று சில விசுவாசிகளும்கூட இழுப்புண்டு போகும் காலமாக இருக்கின்றது. கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். பெருந்திண்டிக்காரரும், இந்த உலக கவலைகளால் உள்ளம் நிறைந்திருக்கும் மனிதர்கள் தங்குமிடங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். கற்றுக் கொண்ட சத்தியத்திலிருந்து விலகிக் கொள்ளாமல், சத்தியத்திலே உறுதியாய் நிலைத்திருங்கள். கர்த்தர் சமீபமாக யிருக்கின்றார்.
ஜெபம்:
பரலோக தேவனே, இந்த உலகத்தின் மாயைக்குள் நாம் சிக்கி விடாமல்இ ஆதியிலே கொண்ட, உம்மைக் குறித்த வைராக்கியத்தில் உறு தியாய் நிலைத்திருக்க பெலன் தங்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 12:1-2