புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 24, 2023)

கர்த்தரை தேடுகின்றவர்கள் யார்?

சங்கீதம் 34:10

கர்த்தரைத் தேடுகிறவர்க ளுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.


மாலை வேளை தன் நண்பர்களோடு இரவு நேர கேளிக்கை விடுதிக்கு (Night Club) செல்வதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த வாலிபனா னவன், அன்றைய நாள் தேவனுடைய பண்டிகையிள் நாளாக இருந்த தால், காலையிலே ஆலயத்திற்கு சென்று செய்ய வேண்டி சடங்கு களை முறைப்படி முடித்துவிட்டு, மதிய வேளையிலே வீடு திரும்பினான். அன்றிரவு அவன் எங்கே போகி ன்றான் என்று அறிந்திருந்த பெற்றோர்? அவனை நோக்கி: நீ ஆலயத்திற்கு சென்று வந்தாயா என்று கேட்டார்கள். அதற்கு அவன் ஆம் நான் சென்று இன் னென்ன பிரகாரமாக சடங்குகளை செய்தேன் என்று விளக்கிக் கூறினான். மாலையிலே அவன் செல்லவிருக்கும் இடத்தில் நடைபெறும் நிகழ் சிகள், களியாட்டங்கள், பார்க்கக்கூடாத காட்சிகள், அருந்தக்கூடாத பான ங்கள், நுகரக்கூடாத பொருட்கள் போன்றவற்றைப்பற்றி அவர்கள் எதை யும் அவனிடம் கேட்கவில்லை. அவன் மதச் சடங்குகளை நிறை வேற்றினான் என்ற மனத்திருப்தி பெற்றோருக்கு போதுமாக இருந்தது. இது தேவனை திருப்த்தி படுத்துமாக? வெறும் மதங்சடங்ககுகள் தேவ னுக்கு உகந்த வாசனையாக இருக்குமா? அந்த வாலிபனானவனும், அவனு டைய பெற்றோரும் தேவனைத் தேடுகின்றார்கள் என்று கூற முடியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு நன்மையுங் குறைவுபடாத வாழ்க்கை கர்த்தரைத் தேடுபவர்களுக்குரியதாகும். கர்த்தரை தேடுகின் றவர்கள் யார்? கர்த்தரை தேடுகின்றவர்கள், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறார்கள். பிள்ளைகளே, வந்து எனக்குச் செவி கொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்பு க்கும் விலக்கிக் காத்துக்கொள். தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள் என்று பரிசுத்த வேதா கமத்திலே வாசிக்கின்றோம். இன்று பல மனிதர்கள், தங்கள் வாழ்விலே கர்த்தரை ஆலயக்கட்டிடங்களுக்கு உட்படுத்தி, ஆலய வாசலோடு கர்த் தரை விட்டுவிடுகின்றார்கள். அதன்பின்னர் தங்கள் இருதயம் வாஞ்சிப் பதை நாடித் தேடுகின்றார்கள். பிரியமானவர்களே, நாமே தேவன் தங்கும் ஆலயமாக இருக்கின்றோம். நம்முடைய வாழ்க்கையானது, தேவனுக்கேற்ற பரிசுத்தமுடையதாக இருக்க வேண்டும். எனவே வேதம் தீமை என்று கூறுபவவைகளை விட்டு விலகுங்கள். சத்திய வேதம் கூறும் நன்மைகளை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனேஇ, துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் உம் வேதத்தின் வழியில் நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோபு 1:1-5