புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 23, 2023)

நீடித்த நாட்கள்

சங்கீதம் 34:12

நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்?


சீரும் சிறப்புமாக நீடுழி வாழ வாழ்த்துகிறோம் என்று மனிதர்கள் தங்கள் வாழ்த்துதலைக் கூறிக் கொள்வார்கள். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்று உலகோர் கூறிக் கொண்டாலும், நோயுற்று போகும்வரை செல்வத்தை திரட்டடிக் கொள்வதற்கு அரும்பாடுகளை படுகின்றார்கள். எவை எப்படியாக இருந்தாலும், நிச்சயமாக மனிதர்கள் எல் லோரும் நீடித்த மகிழ்ச்சியான, அமைதி நிறை ந்த, நிறைவுள்ள வாழ்க்கையை இந்த உலகத்திலே வாழ விரு ம்புகி ன்றார்கள். அப்படியாக ஒரு மனித னானவன் இந்த உலகத்திலே நிறை வான செல்வத்தோடும், பூரணமான ஆரோக்கியத்தோடும், நூறு ஆண்டு கள் வாழ்ந்தாலும் அதனால் அவனு க்கு உண்டாகும் நன்மை என்ன? மனுஷன் உலகம் முழுவதையும் ஆதா யப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ;டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப் பான்? என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இந்த உலகத் தின் போக்கை நாடி, அதிலே வெற்றி பெற்றவர்கள் இந்த உலகத்தை ஆதாயப்படுத்திக் கொள்கின்றார்கள். அவர்களின் மரண வீட்டிலும், அவன் நிறைவாக வாழ்ந்தான் என்ற வாழ்த்துதலை பெற்றுக் கொள்கி ன்றார்கள். ஆனால், இந்த உலகத்தின் போக்கிலே, ஒருவராலும் நித்திய நன்மை யான பரலோகத்தை கண்டடைய முடியாது. நித்திய ஜீவனை நாடி ஓடு கின்றவர்கள், நித்திய நன்மையை வாஞ்சிக்கின்றார்கள். அந்த நன்மையானது என்ன? பரலோகத்திலே பிதாவின் சித்தம் செய்யப்படு வதைப் போல, இந்தப் பூலோகத்திலே தங்கள் வாழ்க்கையை பிதா வாகிய தேவனுக்கு ஒப்புக் கொடுத்து, அவருடைய சித்தத்தை நிறை வேற்றுகின்றவர்களே நித்திய நன்மையை கண்டடைகின்றார்கள். உங் கள் வாழ்க்கையிலே நீங்கள் நாடும் நன்மை என்ன? ஒலிம்;பிக் ஒட்டப் போட்டியிலே பங்கு பெற்றும் ஓட்டப் பந்தைய வீரனானவனின் கண்கள், பரிசாகிய தங்கப் பதக்கத்தின்மேல் இருக்கும். இதை பெற்றுக் கொள் ளும்படி அவன் பல ஆண்டுகள் அயராது பிரயாசப் படுகின்றான். பல தியாகங்களைச் செய்து, பயிற்சிகளை எடுக்கின்றான். உங்கள் கண்கள் எங்கே பதிந்திருக்கின்றது. உங்கள் வாழ்வின் இலட்சியம் என்ன? எதை நன்மையை என்று கருதுகின்றீர்கள்? எதை நீடித்த வாழ்வு என்று எண்ணுகின்றீர்கள். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவரு டைய நீதியையும் தேடுங்கள்;. அதையே உங்கள்வாழ்வின் மேன்மை என்று எண்ணுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் உம்முடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பதன் மேன்மையை உணர்ந்து கொள்ளும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து நடத்துவீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 16:26