தியானம் (வைகாசி 22, 2023)
எல்லா பயத்தையும் நீக்குவார்
சங்கீதம் 34:9
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
தாவீது ராஜா, இளைஞனாக இருந்த நாட்களிலே, அவன் தன் தகப்பனானவனின் கொஞ்ச ஆடுகளை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தான். தன் வாழ்வின் உயர்வான நாட்களிலும், தாழ்வான நாட்களிலும், எதிரிகளால் சூழ்ந்து கொண்ட நேரத்திலும், பாவம் செய்து ஒடுங்கி போல சந்தர்ப்பங்களிலும், தேவனை துதிப்பதை அவன் விட்டு விடவில்லை. 'கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.' என்று அவன் பாடின சங்கீதத்தின்படி வாழ்ந்து வந்தான். சொந்த ஜனங்களால் துரத்த ப்பட்டு, வனாந்திரத்திலே இருந்த நாட்க ளிலே 'என் வாய் ஆனந்தக் களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போ ற்றும். என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்' என்று தேவனைத் துதித்துப் பாடினான். அவன் எக்காலத்திலும் தேவனை தேடினான், ஆதலால் தேவன்தாமே அவனுடைய எல்லாப் பயத்துக்கும் அவனை நீங்கலாக்கிவிட்டார். இன்றைய நாட்களிலே மனிதர்கள் பொதுவாக மரணவீடுகளிலே தேவனை குறித்து சிந்திக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் இழப்புகள் உண்டாகும் போது, விசு வாசத்திற்கு விரோதமான வார்த்தைகளை அறிக்கையிடுகின்றார்கள். திருமண நாட்களிலே, ஆலயத்திற்கு சென்று சுமார் ஒரு மணிநேரம், தேவன் முன்னிலையிலே தேவ பயத்தோடு ஒருவரை ஒருவர் தாங்கி வாழ்வோம் என்று அறிக்கையிடுகின்றார்கள். தங்கள் பிள்ளைகளை தேவபயத்தோடு வளர்ப்போம் என்று உறு திமொழி கூறிக்கொள்கின்றார்கள். பின்னர், கொண்டாட்ட மண்டபத்தி ற்கு சென்று பல மணிநேரங்கள் குடித்து வெறித்து பல களியாட்டங்க ளிலே ஈடுபடுகின்றார்கள். கல்வி கற்கும் இளமை நாட்களிலே பக்திN யாடு ஆண்டவரை தேடுகின்றார்கள். படித்து பட்டம் பெற்ற பின்பு முன் பிருந்த பிரதிஷ;டைகளிலிருந்து விலகி, இளம் காலத்திலே வாழ்;கையை உல்லாசமாக களிக்க வேண்டும் என்று அதற்குரிய வழிகளை தேடிக் கொள்கின்றார். ஆனால், நாமோ எக்காலத்திலும் நம் தேவனை ஆர்வ த்தோடு தேடுகின்றவர்களாகவும், பிரதிஷ;டையிலிருந்து விலகிக் கொள் ளாமலும், அவரை எப்போதும் மகிமைப்படுத்துகின்றவர்களாகவும் இரு க்க வேண்டும். கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
ஜெபம்:
நீதியின் தேவனே, என்னுடைய வழிகளின்மேல் நீர் பிரியமாக இருக்கும்படி, என் வாழ்க்கையின் உயர்விலும், தாழ்விலும், எல்லா பருவங்களிலும், என்னுடைய நடைகள் நீர் காத்துக் வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 37:25