புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 21, 2023)

நம்முடைய சிந்தை

பிலிப்பியர் 2:5

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;


ஒரு போதகரானவர், வேதப்படிப்பொன்றை நடத்திக் கொண்டிருக்கும் போது, அவர் விசுவாசிகளை நோக்கி: 'நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினா லாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன் மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவா னாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந் தையே உங்களிலும் இருக்கக்கடவது' என்று பரிசுத்த வேதாகமத்தில் கூறிய பவுலடிகள் அறிவுரை கூறுகிறார் எந்த சந்தர்ப்பங்களிலே நாம் இதை கடைப்பிடிக்க வேண்டும்? நம் வாழ்விலே இதைக் கடைப்பிடிக்க தேவையில்லை என்று கூறும் சந்தர்ப்பம் ஏதே னும் உண்டா? சபை ஆராதனைகள், சபை வைபவங்கள், உயர்வான நேரங்கள், தாழ்வான காலங்கள், வேதனைகள் மற்றும் சோதனைகள் சூழும் நேரங்கள், குடும்ப சமூக வைபோவங்கள், நண்பர் உறவினரோ டுள்ள மத்தியில்;, கலவி நிலையங்களில், வேலைத் தலங்களில் நன்மை க்கு தீமை செய்யப்படும் காலங்கள், காரணமின்றி பகைக் கப்படுகின்ற நேரங்கள் இப்படியாக எந்த சூழ்நிலையிலே, கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையை விட்டு விட முடியும்? சற்று சிந்தித்துப் பாருங்கள் என்றும் இவைகளை குறித்து ஒவ்வொருவரையும் வேண்டிக் கொண்டார். கிறிஸ் துவின் சிந்தையை தரித்திருப்பதைக் குறித்து இன்று நாம் நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போம். நம்முடைய கர்தராகிய இயேசு கிறி ஸ்து, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப் பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். எந்த காலத்திலும், எந்த வேளையிலும் பிதாவாகிய தேவனுடைய சித்த த்தை தன் வாழ்விலே நிறைவேற்றும்படி தம்மை நிபந்தனையின்றி ஒப் புக் கொடுத்தார். நாம் நம் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும், நம்முடைய மாம்ச சிந்தைக்கு இடங்கொடுக்காமல், கிறிஸ்துவைப் போல, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நம் வாழ்விலே நிறைவே ற்றுவதில் அனுதினமும் வளர்ந்து பெருக வேண்டும்.

ஜெபம்:

மேலானவைகளையே நாடுங்கள் என்ற தேவனே, கிறிஸ்துவும் எனக்காய் பாடுபட்டது போல, நானும் அவருடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து, அழியாத மகிமையப் பெற்றுக் கொள்ள பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 2:14-16