புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 20, 2023)

தேவ கிருபையை நாடுங்கள்

சங்கீதம் 51:1

தேவனே, உமது கிருபை யின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.


ஒரு தகப்பனானவர் தன் மகனானவனிற்கு, நல் வாழ்வை கண்டடையும்படி பலமுறை புத்தியை தெளிவிக்கும் அறிவுரைகளையும், தயவான ஆலோசனைகளயும் கூறியிருந்தார். தன் மகனானவன், அவைகளை அற்பமாக எடுத்துக் கொள்கின்றான் என்று கண்டபோது, தவறான தீர்மானங்களால் வரக்கூடிய விபரீதங்களைக் குறித்து அவனுக்கு எச்சரிப்பை வழங்கி வந்தார். அதை க்குறித்தும் அவன் பொருட்படுத்தாமல் தன் வழியிலே வாழ்ந்த போது வாழ்விலே பல பிரச்சனைகளையும் அவைகளால் பல பின் னடைவுகளையும் சந்திக்க நேரிட்டது. இவ்வாறகவே விசுவாசிகளுடைய வாழ்கையிலும்; சில பிரச்சனைகள் அவர்களுடைய சொந்த தீர்மானங்களால் உண்டாகின்றது. வேறு சில பிரச்சனைகள் அவர்கள் தீங்கேதும் நினையாதிருக்கின்ற வேளையிலே அவர்களுக்கெதிராக வருகின்றது. ஆனால் விசுவாசிகள் அவையெல்லாவற்றின் காரணத்தையும் ஒன்றில் பிசாசின்மேல் போட்டு விடுகின்றார்கள் அல்லது தேவன் ஏன் என்னை இப்படி சோதிக்கின்றார் என்று தேவனையே நொந்து கொள்கின்றார்கள். தங்கள் சொந்த தவறுகளை மறைத்துக் கொள்வதால், சபைகளிலே மற்றவர்கள் இடறிப் போகத்தக்கதான வழிகளை உண்டு பண்ணிவிடுகின்றார்கள். தாவீது என்னும் தேவனுடைய தாசனின் வாழ்க்கையிலே வந்த துன்பங்கள் ஏராளம். ஆனால், தாவீதின் தனிப் பெரும் சிறப்பம்சம் என்னவென்றால், தன் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களுக்கு தன் தவறான தீர்மானங்களே காரணம் என்று உணர்ந்து கொள்ளும் போது, முதலாவதாக, அவன் அதை ஏற்றுக் கொண்டான். அந்த தவறான தீர்மானங்களை குறித்து மனம்வருந்தி தேவனை அண்டிக் கொண்டு அவருடைய கிருபையை நாடினான். தன் தவறுகளை மறைக்காமல், இந்நாட்களில் நாம் அதை நமக்கு படிப்பினையாக கொள்ளும்படி வெளிப்படையாக அறிவித்திரு க்கின்றான். பிரியமானவர்களே, ஒருவன் தன் வாழ்க்கையில் தவறு செய்வது ஒரு விஷயம், அதை அவன் மூடிமறைத்து, அதனால் மற் றவர்கள் மத்தியிலே இடறல்களை உண்டாக்குவது, தான் செய்த பாவ த்தோடும், அவன் பல சாபங்களை தன்மேல் ஏற்றிக் கொள்கின்றான். (மத் 18:6-7). எனவே, நம்முடைய தவறுகளால் இடறல்களை உண்டாக் காதப டிக்கு நாம் நம் ஆத்துமாவை அழிவுக்கு காத்துக் கொள்வோமாக.

ஜெபம்:

ஒருமைப்பாட்டில் தேறுங்கள் என்று சொன்ன தேவனே, நான் சக விசுவாசிகள் மத்தியிலே குழப்பங்களையும் பிரிவினைகளையும் ஏற்படு த்திவிடாதபடிக்கு என்னை காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:1-5