புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 19, 2023)

யாருடைய குற்றம்?

நீதிமொழிகள் 28:13

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.


கடைக்குச் சென்ற மனிதனானவன், தன் வாகனத்தை தரிப்பிடத்திலிருந்து பின்புறமாக ஓட்டும் போது, தரிப்பிடத்திலிருந்த மின்குழிழ் கம்பத்திலே அடித்துவிட்டான். அதனால் அவனுடைய வாகனத்தின் பின்புறத்திலே கணிசமான சேதம் ஏற்பட்டிருந்தது. சில நாட்களுக்கு பின், அந்த சேதத்ததோடு அவன் தன் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது, அவனுக்கு பின்னாக வாகனத்தை ஓட்டி வந்த சாராதியானவனொருவன், குறித்த நேரத்திற்குள் வேகத்தை, குறை த்து, கட்டுபடுத்த முடியாமல், அந்த மனிதனாவனுடைய வாகனத்தின் பின்புறத்தில் அடித்து விட்டான். வாகனத்திலிருந்த கணிசமான சேதத்தோடு, தற்போது மேலும் சிறிய சேதம் ஏற்பட்டது. அந்த மனிதனானவனுக்கு பின்பாக வந்த சாரதி, உடனடியாக, அந்த மனிதனானவனை நோக்கி: இது என்னுடைய தவறு. என்னாலே உன் வாகனத்தில்; பெரிதான சேதம் ஏற்பட்டிருக்கின்றது. முழு சேதத்தையும் திருத்துவதற்கு நான் அதற்குரிய பணத்தை கொடுக்கின்றேன் என்றான். தன் வாகனத்தின் பின்புறத்திலே ஏற்பட்ட முழு சேதமும் அந்த சாரதியினால் ஏற்ப டுத்தப்படவில்லை என்பதை நன்கு அறிந்திருந்த அந்த மனிதனானவன், தன் தவறினால், வாகன தரிப்பிடத்திலே ஏற்பட்ட சேதத்தை குறித்து ஏதும் பேசாமல், தனக்கு பின் வந்த சாரதியிலே முழுத் தவறையும் போட்டுவிட்டான். இவ்வண்ணமாகவே இன்று சில மனிதர்கள் தங்கள் தவறுகளால் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகளை மறைத்து வைத்திருக்கின்றார்கள். சபையிலோ, சங்கத்திலோ ஏதாவது சிறிய தவறு ஏற்படும் வரை காத்திருந்து, தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட எல்லா பின்னடைவுக்கும் சபை அல்லது சங்கத்திலே பழியை போட்டுவிடுகின்றார்கள். இதனால் அவர்கள் சக விசுவாசிகள் மத்தியில் கருத்து முரண்பாடுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்த காரணரா கிவிடுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் சொற்ப காலம்; தங்களை நீதிமான்களாகவும், மற்றவர்களுடைய தவறுகளினால் தாங்கள் பலியாடுகளைப் போலானோம் என்று காண்பித்துக் கொள்கின்றார்கள். இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவன், மனிதனுடைய சிந்தையை அறிவார். தேவனுக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை. எனவே ஏற்றகாலத்திலே தன் பாவங்களை அறிக்கையிட்டு விட்டுவி டுகின்றவன் தேவனிடத்திலிருந்து இரக்கத்தை பெறுகின்றான். விசுவாசிகள் மத்தியிலே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துகின்றான்.

ஜெபம்:

என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கின்ற தேவனே, என் குற்ற ங்களை நான் உணர்ந்து பாரமுகமாக விட்டுவிடாமலும், அதை மற்ற வர்கள் மேல் சுமத்தாமலும் இருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங் 139:1-10