தியானம் (வைகாசி 18, 2023)
இன்னும் கொஞ்சக் காலம்
2 கொரிந்தியர் 4:17
அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிக மான நித்திய கனமகி மையை உண்டாக்குகிறது.
சிறிய கிராமமொன்றிலே வாழ்ந்து வந்த ஜனங்கள், தமது வாழ்வாதாரம் கருதி, அந்தக் கிரமத்திலிருந்து இடம் பெயர்ந்து, வேறொரு ஊருக்கு கால்நடையாக சென்று கொண்டிருந்தார்கள். செல்லும் பாதையானது காடும், மலையும் சார்ந்ததாக இருந்தது. பல சிரமங்கள் மத்தியிலே, சகி ப்புத் தன்மையோடு, அநேக நாட்களாக பயணம் செய்து கொண்டிரு ந்தார்கள். நாட்கள் பல கடந்து சென்றபின்பு, அங்கிருந்த சில குடும்ப ங்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு, கடும் வாக்குவாதமாகி, அவர்களுக்கிடையே பிரிவினை உண்டாயிற்று. அவர்கள் மத்தியிலே இருந்த முதியவரொருவர், அவர் களை நோக்கி: பிள்ளைகளே நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். நாம் யாவரும் ஏறத்தாழ பயணத்தின் முடிவுக்கு வந்து விட்டோம். இன் னும் சில நாட்களிலே நாம் செல்ல வேண்டிய ஊருக்கு சென்றடை வோம். இதுவரை எவ்வளவாய் பிரயாசப்பட்டீர்கள். எத்தனை கஷ்டங் களை சகித்துக் கொண்டீர்கள். பலனை அறுவடை செய்யும் நாள் சமீபித்திருக்கும் போது, ஏன் இந்த குழப்பம்? இன்னும் கொஞ்ச நாட்க ளுக்கு ஏன் நீங்கள் பொறுமையாக இருக்கக்கூடாது என்று அவர்கள் உற்சாகப்படுத்தி அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை. வரப்போகிறதையே நாடிச் சென்று கொண்டிருக்கின்றோம். இந்த பூமியிலே பல சவால்கள் உண்டு. தனி மனிதனின் மனதிலேயே பல்வேறுபட்ட யோசனைகள் தோன்றும். காரியம் அப்படியாக இருக்கும் போது, பல ஜனங்கள் கூடியிருக்கும் இடங்களிலே, கருத்து முரண்பாடுகளும், வாக்குவாதங்களும், கலகங்களும் உண்டாக சாத்தியங்கள் பல உண்டு. நீங்களே உங்கள் வாழ்க்கையை சற்று ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் இதுவரைக்கும் பல பிரயாசங்களை பட்டிருப்பீர்கள். பல தியாகங்கள் செய்திருப்பீர்கள். பல காரியங்களை சகித்துக் கொண்டிருப்பீர்கள். அவையெல்லாவற்றையும் மறந்து அற்ப காரியங்களுக்காக பிரிவினைகளை ஏற்படுத்தாமல், இன் னும் கொஞ்சக் காலம் கர்த்தருடைய நாமத்திலே சகித்துக் கொள்ளு ங்கள். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளி ன்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று கர்த்தர் கூறியிருக்கின்றார். எனவே, உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
ஜெபம்:
அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கின்ற தேவனே, பெற்ற பணியை பொறுமையோடு நான் செய்து முடிக்கும்படி எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:1-5