புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 17, 2023)

எனக்கு நியமிக்கப்பட்ட ஓட்டம்

பிலிப்பியர் 3:14

பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த குடியானவன், தன் குடும்பத்தின் பிழை ப்புக்காக தோட்டம் செய்து வந்தான். நிலத்தை பண்படுத்துவதிலிருந்து, அறுவடைகளை சந்தைப்படுத்தும் நாள்வரைக்கும் கடினமாக உழைத்து வந்தான். அதுவே அவனுடைய நோக்கமாக இருந்து வந்தது. ஒரு நாள் அவனுடைய உறவினர்களிலொருவன் அந்த குடியானவனை சந்தித்துப் பேசி னான். அந்த உறவினன் பேசுகையில்: அயலிலுள்ள பிறனுடைய தோட்டத் தைப் பார்த்தையா? எவ்வளவு செழி ப்பாக காட்சியளிக்கின்றது என்று பிற னுடைய தோட்டத்தைப் பற்றி பேசிய பின்பு, தன் வழியே போய்விட்டான். தானும் தன் வேலையுமாக இருந்த குடியானவனின் மனதிலே, இப்போது, பிறனுடைய தோட்டத்தைப் பற்றிய வித்து விதைக்கப்பட்டது. சில நாட்களாக, அவன் பிறனுடைய தோட்டத்தை அதிகமாக நோக்கிப் பார்க்க ஆரம்பித்ததால் இப்போது அவன் முகநாடி வேறுபட ஆரம்பித்தது. மனதிலே எரிச்சலின் ஆவி கிரியை செய்யத் தொடங்குவதை உணர்ந்து கொண்ட அந்த குடி யானவன், இதை இப்படியே விட்டால் விபரீதமாகிவிடும் என்று, மறு நாள் காலையிலே அந்த பிறனுடைய வீட்டிற்கு சென்று, அவனுடைய பிரயாசத்தை பாராட்டி, தன்னுடைய தோட்டத்தை பராமரிப்பதற்கு தன க்கும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் தரும்படி கேட்டுக் கொண் டான். ஆம், பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலும் பிரதா னமான ஒரு நோக்கம் உண்டு. நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதே அந்த நோக்கமாகும். அந்த யாத்திரையின் வழியிலே, மேலே குறிப் பிடப்பட்ட உறவினன் போன்ற வழிப்போக்கர்களை நாம் சந்திக்க நேரி டலாம். சில வேளைகளிலே வழிப்போக்கர்கள் நம்முடைய நோக்கத்தை திசைதிருப்பும்படியாக காரியங்களை செய்யலாம் அல்லது கூறலாம். ஆனால் நாமோ, நம்முடைய இலக்கிலிருந்து கண்களை எடுத்துக் கொள் ளாமல் பாதுகாக்க வேண்டும். கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடு க்க பழகிக் கொள்ளுங்கள். தீமையை உங்கள் சிந்தையில் விதைக்கி ன்ற மனிதர்களைக் குறித்து மிக மிக எச்சரிக்கையாய் இருங்கள். அவ ர்களுடைய வழிகளுக்கு உங்களை உட்படுத்தாதிருங்கள். நல்ல ஆலோ சனைகளை பற்றிக் கொள்ளுங்கள். ஆகாத நோக்கம் சிந்தைகளை உங் களை விட்டு அகற்றி விடுங்கள். மற்றவர்களுடைய செயற்பாடுகளி னாலே உங்கள் மனட்சாட்சியை கெடுத்துக் கொள்ளாதிருங்கள். கர்த்தர் உங்களுக்கு நியமித்த ஓட்டத்தில் பொறுமையோடே ஓடுங்கள்.

ஜெபம்:

பரம அழைப்பின் பந்தையப் பொருளுக்காக என்னை அழைத்த தேவனேஇ ஆகாத நோக்கங்களுக்கு நான் இடங் கொடுக்காமல்இ நியமித்த ஓடத்தில் பொறுமையோட ஓடும்படி கற்றுத் தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:3-5