புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 16, 2023)

தளர்ந்து போய்விடாதிருங்கள்

கலாத்தியர் 6:9

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.


மனிதர்களின் சிறுமையும் எளிமையுமான நாட்களிலே, அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தேன். கைமாறு கருதாமல் பல உதவிகளை செய்து வந்தேன். நன்மையேயன்றி அவர்களுக்கு தீமை எதையும் நான் நினைத்ததில்லை. அவர்களிடமிருந்து நன்றியறிதலையும் நான் எதிர் பார்த்தது இல்லை. ஆனால், அவர்களுக்கு வசதிகள் பெரு கிய போது, நன்மைக்கு தீமை செய்தார்கள். இத்தனை வருட ங்களாக கற்ற பாடங்கள் போ தும். இறுதியிலே மிஞ்சியது நம்பிக்கை துரோகமும் ஏமா ற்றமும் (னளையிpழiவெஅநவெ) மட் டுமே. இனி நான் என்பாட்டை பார்த்துக் கொள்வேன் என்று ஒரு விசுவாசியானவன் தன் மனவே தனையை மேய்ப்பரொருவரிடம் கூறிக் கொண்டான். அதற்கு அந்த மேய்ப்பனானவர் தம்பி: நீ கூறுவதில் உண்மை உண்டு. ஆனால், நமக் காக தன் ஜீவனை கொடுத்த ஆண்டவர் இயேசுவுக்கு நீ ஒருபோதும் நம்பிக்கை துரோகம் செய்யவில்லை. வேதனை உண்டாக்கும் வழி யிலே நீ நடக்கவில்லை என்றால், நீ செய்து வந்த நன்மைகளையும் உத விகளையும் நிறுத்திவிடு என்று கூறினார். அன்றிரவு, அந்த வார்த் தைகள் அந்த விசுவாசியானவனுடைய மனதிலே கிரியை செய்தது. கர்த் தராகிய இயேசு தன்மீது எவ்வளவு பொறுமையுள்ளவராக இருக்கி ன்றார் என்பதை சிந்தித்துப் பார்த்து, அவருக்கு நன்றியை செலுத்தி னான். நற்கனியை கொடுக்கும் மரமானது, மனிதர்களுடைய செயற்பாடு களினாலே, தன் கனியின் சுவையை தான் மாற்றிக் கொள் ளாது. அதனிடத்திலே கனியை பறிக்கும் சன்மார்க்கனுக்கும், துன்மார்க்கனுக் கும், தேவ பக்தியுள்ளவனுக்கும் அது ஒரேவிதமான நற்கனியைக் கொடு க்கும். எனவே, மாறிப்போகும் மனிதர்களின் கிரியைகளை மையமாக வைத்து, தேவன் தந்த திவ்விய சுபாவங்களை மாற்றிக் கொள்ளாதிரு ங்கள். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவரு க்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கட வோம். உங்கள் தீபம் அணையாதிருப்பதாக. உங்களுக்குள்ளே அது பற்றியெரியும்படி அனல்மூட்டி எரியவிடுங்கள். பூமிக்கு உப்பாயிருங்கள். மற்றவர்களுடைய செயற்பாடுகள் உங்கள் உப்பின் சாரத்தை இழக்கப் பண்ணாமல் தேவன்தாமே உங்கள் சிந்தையைக் காத்துக் கொள்வாராக.

ஜெபம்:

என்மேல் நீடிய பொறுமையாயிருக்கும் தேவனே, நான் நற்கிரியைகள் செய்வதில் ஒரு போதும் சோர்ந்து போகாமல் இருக்கும்படிக்கு நீர் என்னை பெலப்படுத்தி வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:7