புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 15, 2023)

மறவாமல் நினைக்கின்ற தெய்வம்

ஏசாயா 46:4

நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்


முதிர்வயதும், நரை மயிருமாக காணப்பட்ட வயோதிபரொருவர், தவ றாமல் ஆலயத்திற்கு சென்றுவருவது அவருடைய வழக்கமாக இருந்து வந்தது. தன் சரீரத்தில் பெலன் ஒடுங்கிக் கொண்டு போவதையும், தன் நடையின் வேகம் குறைவதையும், தன் கால்கள் தள்ளாடும் நிலையிலு ள்ளது எனபதையும் பொருட்படுத்தாமல், ஆராதனை தொடங்குவதற்கு முன்னதாகவே தான் ஆலயத்தில் காணப்பட வேண்டும் என்று காலை யிலே நேரத்தோடு தன் பயண த்தை ஆரம்பித்துவிடுவார். ஒரு நாள் அவர் ஆலயத்திற்கு செல்ல முடி யாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஆலயத்திலே நூற்றுக் கணக்கான ஜனங்கள் வருகை தந்திருந்த போ தும், ஆலயத்தின் மேய்ப்பரின் கண்கள் அந்த வயதான ஐயாவை தேடி யது. அவரைக் காணவில்லை. ஆராதனை முடிந்த பின்பு, துரித மாக அவர் வாழ்ந்த வீட்டிற்கு சென்றார். கட்டிலிலே படுத்திருந்த அந்த முதி யவர், சிரித்த முகத்தோடு, மேய்ப்பரை வரவேற்றார். அவருடைய சரீரம் பெலவீனமடைந்ததால், அவருக்கு ஆலயத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஆனால் ஆலயத்தின் மேய்ப்பரோ, கிழமை தோறும் அவரை காணும்படி அவருடைய வீட்டிற்கு சென்று, ஜெபம் செய்து, அவரோடு உரையாடி வருவது வழக்கமாயிற்று. ஆம் பிரியமா னவர்களே, அந்த மேய்ப்பரானவரைப் போலவே, நம்முடைய பிரதான மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவுமிருக்கின்றார். நம்முடைய பெலவீன ங்களிலே நம்மை தள்ளிப்போடாமல், நம்முடைய குறைவுகளினாலே அவர் நம்மை அற்பமாக எண்ணாமலும், நம்மை தேடிவருகின்ற ஒரே தெய்வமாக இருக்கின்றார். அவருடைய சீஷர்கள் அவரைச் சார்ந்திருந் தார்கள். அவர்கள் எங்கிருந்தார்களோ, அங்கே அவர்களை தேடிச் ஆண்டவர் இயேசு சென்றார். நற்செய்தியின் நிமித்தம் அவருடைய சீஷ ர்கள் சிறைப்படுத்தப்பட்ட போது, அங்கே அவர்களை தேடிச் சென்றார். ஆம், தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கி வருகின்றார். தம்முடைய ஜனங்களை நோக்கி: உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் என்று வாக்குரைத்திருக்கின்றார். பெலனுள்ள நாட்களிலே அவரை தேடுங்கள். அவரையே எப்போதும் சார்ந்து வாழுங்கள். அவர் தம்முடையவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.

ஜெபம்:

மறவாமல் என் நினைவாய் இருக்கும் தேவனே, நான் என் வாழ்நாட்கள் முழுவதும் உம்மை பற்றிக் கொண்டு, நீர் காட்டும் வழி யிலே நடக்க எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத் துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 28:20