புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 14, 2023)

கவலைகளும் பாரங்களும்...

ரோமர் 8:37

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.


இவ்வுலகிலே சவால்கள், பாடுகள், துன்பங்கள் இல்லாத வாழ்க்கை உண்டா? வாழ்க்கையை அழுத்தும் பாரங்கள் இருதயத்தை சோர்ந்து போகப் பண்ணிவிடுகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளிலே மனிதர் களை சுற்றி நெருக்குகின்ற பாவங்கள் அவர்களை மேற்கொண்டுவிடுகி ன்றது. ஆண்டவர் இயேசுவின் சீஷர்களாகிய, எமது வாழ்க்கையிலும், இவைகள் விதிவிலக்கானவைகள் அல்ல. நித்திய வாழ்வை பெறும்படி பரம தேசத்தை நோக்கி பயணம் செய்யும் நாம், எம் வாழ்வில் உண்டாகும் பாரங்களை சுமந்து திரிகின் றவர்களா? அல்லது அவற்றை இறக்கி வைப்பவர்களா? நெருக்குகி ன்ற சூழ்நிலைகளை மேற்கொள்கின்றவர்களா? அல்லது அவைகள் நம்மை மேற்கொள்ளும்படி அவற் றிற்கு ஒப்புக் கொடுக்கின்றவர் களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் பாரங்களை கர்த்தருடைய பாதத்திலே இறக்கி வைக்கும் போது ஆறுதல் அடைகின்றோம். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன் என்று ஆண்டவர் இயேசு அழைக்கின்றார். அந்த அழைப்பை ஏற்று வந்தபின்பும் பாரங்களை ஏன் சுமக்கின்றீர்கள்? பார மான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். நாளைக்காக ஏன் கவலையடைகின்றீர்கள்? தேவ சமாதானம் உங்கள இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள் காத்துக் கொள்ளும்படி, நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந் தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறது மில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. ஜெயங் கொடு க்கும் தேவன் நம்மோடு இருக்கின்றார். எனவே, பாரங்களை தூக்கி சுமக்காமலும், கவலைகளை மனதிலே வைத்திருக்காமலும், கர்த்தரு டைய பாதத்திலே இறக்கி வைத்து விடுங்கள். அவர் உங்களை ஆதரி த்து வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். அடியேன் உமது ஆலோசனையின் வழியில் நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:7