புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 13, 2023)

சிறிய ஆரம்பம்

லூக்கா 6:45

இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்


ஒரு குடும்பத்திலே இருந்த பிள்ளைகளிலொருவன், எப்போதும் இல் லாததை குறித்து முறுமறுக்கின்றவனாக இருந்து வந்தான். மிகவும் சிறி தாக தொடங்கிய அந்த சுபாவமானது, குழந்தைப் பருவத்திலே, பார்ப்ப தற்கு இரசனைக்குரியதாக இருந்தது. அவன் தந்தையானவர் அவனு டைய சிறு பிரயாத்திலிருந்து அவனை நோக்கி: மகனே, நம்மிடம் இல் லாதவைகளைக் குறித்து நொந்து கொள்வதை விட்டுவிட்டு, நம்மிடம் இருப்பவைகளுக்காக நன்றியறிதலு ள்ளவனாக இரு என்று பல முறை; ஆலோசனைகள் கூறினாலும், அவன் தன் முறுமுறுப்பினால், பெற்றோர் தான் கேட்பவைகளை கொடுத்து விடுவார்கள் என்று எண்ணி முறுமுறு ப்பையோ விட்டுவிடாதிருந்தான். ஆனால், அந்த சுபாவமானது அவ னோடுகூட வளர்ந்து, வாலிபப் பிராயத்திலே நெருஞ்சி முள்ளைப் போல, எப்பக்கம் தொட்டாலும் அவன் கசந்து முறுமுறுப்பவனாக கொள்கி ன்றவனாக இருந்தான். பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசுவின் சீஷர்களாக அழைக்கப்பட்ட நம்முடைய வாழ்க்கையானது நன்றியறித லுள்ள வாழ்க்கையாக இருக்க வேண்டும். நம் இருதயத்திலே நிறைந் திருப்பது எதுவோ, அதுவே நம் வாழ்க்கையிலே வெளிப்படும். எனவே நம்முடைய இருதயத்திலே தேவன் நமக்கு கொடுத்தவைகளைக் குறி த்த நன்றி எப்போதும் இருக்க வேண்டும். நன் மையான சுபாவங்களும், தீமையான சுபாவங்களும், மனிதர்களுடைய வாழ்க்கையிலே சிறிய காரியங்களிலேயே ஆரம்பிக்கின்றது. அவை இரண்டும் ஆரம்பத்திலே அற்பமாகவே தோன்றும். நாளடைவிலே அவை வளர்ந்து பெரும் விரு ட்சமாகிய அதனதன் கனியைக் கொடுக்கும். நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது. அந் தந்த மரம் அது தன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப் பழங்க ளைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட் சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கி ஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல் லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவ னவன் வாய் பேசும் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே நம்மு டைய வாழ்க்கையிலே நாம் எதை வளர்க்கின்றோம் என் பதைக் குறி த்து நாம் எச்சரிக்கiயுள்ளவராக இருக்க வேண்டும். அத் தோடு, நம் வாழ்க்கையைக் குறித்து கூறப்படும் தேவ ஆலோசனைக ளைக் நாம் கேட்டு அதன்படி வாழ நம்மை நாம் ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, நான் என் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்து, அதிலே ஜீவ ஊற்று புறப்படும்படியாய் உம் வார்த்தையின் வழியிலே வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இர ட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 6:8-11