தியானம் (வைகாசி 10, 2023)
நித்திய ஆசீர்வாதம்
மத்தேயு 7:21
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,
நான் உத்தம இருதயத்தோடு கர்த்தருக்கு பயந்து அவருடைய ஆலோசனைகளின்படி நடந்தேன். கர்த்தர் என் எல்லைகளை விரிவாக்கினார். கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும் அதன்படி என் வாழ் விலே ஐசுவரியத்தை பெருகப் பண்ணினார் என்று ஒரு விசுவாசியானவன் கூறிக் கொண்டான். நான் என்னிடம் இருந்தெல்லாவற்றையும் வாரியிறைத்தேன். திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரித்து வருகின்றேன். மேலதிகமாக எனக்கென்று எதையும் நான் வைத்திருப்பதில்லை. கர்த்தர் என் வாழ்விலே இரக்கத் தின் ஐசுவரியமுள்ளவனாக இருக்கும்படி என்னை ஆசீர்வ தித் தார் என்று இன்னுமொருவன் கூறிக் கொண்டான். நான் ஏழை. என்னிடத்தில் ஒன்றுமில்லை. கர்த்தரே ஏழைகளுக்கு பெலனும், எளியருக்கு திடனுமாயிருக்கின்றார். அவர் என்னை விசுவாசித்திலே ஐசுவரியமுள்ளவனாக்கும்படி என்னை ஆசீர்வதித்தார் என்று வேறொருவன் கூறிக்கொண்டான். இந்த மூன்று விசுவாசிகளும் தங்கள வாழ்வின் கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் கூறிய வற்றில் உண்;மை உண்டு. இப்படியாக பலர் வௌ;வேறான அனுபவங்களை கூறிக்கொண்டார்கள். சில சந்தர்ப்பங்களிலே ஏழைகள், ஐசுவரியமுள்ளவர்களை விமர்சிக்கின்றார்கள். வேறு சில சந்தர்ப்பங்களிலே ஐசுவரியவான்கள் ஏழைகளின் வறுமையை குறித்து விமர்சிக்கின்றார்கள். இன்னும் சிலர் ஏழைகளின் வறுமையையும், ஐசுவரியவான்களின் செல்வத்தையும் விமர்சிக்கின்றார்கள். இப்படியாக சிலர் தங்கள் வரங்கள மற்றும் கிரியைகளை குறித்து மேன்மை பாராட்டுகின்றார்கள். அபப்டியானால் யார் கர்த்தருடைய நித்திய ஆசீர்வாதத்தை பெற்றவன்? யார் அவருடைய கூடாரத்தில் தங்குவான்? யார் அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? அவன் யாராக இருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை தன் வாழ்விலே செய்கின்றவனே, கர்த்தருடைய பரிசுத்தஸ்தலத்தில் என்றென்றும் நிiலைத்திருப்பான். அதுவே கர்த்தரால் உண்டாகும் நித்திய ஆசீர்வாதம். எனவே இந்த உலகத்தில் நாம் இருக்கும் நிலையைக் குறித்து மேன்மைபாராட்டாமல், எல்லா சூழ்நிலையிலும் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதையே நமது நோக்கமாக கொண்டிருப்போமாக.
ஜெபம்:
நித்திய ஆசீர்வாதத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, என்னிடத்தில் மேன்மை ஒன்றுமில்லை. நீர் என்னோடு இருப்பதே என் மேன்மை. நீர் என்னை உம்முடைய நித்திய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 12:50